கல்லூரியில் யாரும் பேசாததால் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி..!

சென்னை வேப்பேரியில், அரசு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில், மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி மற்றும் ஆற்காடு பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி ஆகியோர் இரண்டாம் வருடம் கால்நடை மருத்துவம் படிக்கின்றனர். இவர்கள் இருவரும் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். நெருங்கிய தோழிகளான இருவரும், கடந்த வாரம் விடுதி வார்டனுக்கு தெரியாமல் வெளியே சென்று நள்ளிரவில் விடுதிக்கு வந்ததுள்ளனர்.

இது தெரிந்த விடுதி வார்டன்கள் கலைச்செல்வி மற்றும் குமரவேல் ஆகியோர் இரவு நேரம் தாமதமாக வந்த இரண்டு மாணவிகளை அழைத்து கண்டித்துள்ளனர். மேலும், அந்த மாணவிகளின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனால் மாணவியின் பெற்றோர் தங்களது மகள்களை கடுமையாக கண்டித்தனர். அதோடு மட்டுமல்லாமல் விடுதியில் தங்கியுள்ள மற்ற மாணவிகள் மற்றும் கல்லூரியில் உடன் படிக்கும் மாணவிகள், பேராசிரியர்களும் அந்த இரண்டு மாணவிகளிடமும் பேசாமல் இருந்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவிகள் இரண்டு பேரும் யாருக்கும் தெரியாமல் கல்லூரி ஆய்வகத்தில் இருந்து ‘மெர்குரி சல்பைடு’ அமிலத்தை எடுத்து வந்து, குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

விடுதி அறையில் இரண்டு மாணவிகளும் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதை பார்த்து மற்ற மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இரண்டு மாணவிகளையும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இரண்டு மாணவிகளுக்கும் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். வேப்பேரி காவல்துறையினர் தற்கொலைக்கு முயன்ற மாணவிகளின் அறையில் சோதனை நடத்தினர். அப்போது அறையில் கிடைத்த மாணவிகள் தற்கொலை முயற்சிக்கு முன்பு எழுதிய கடிதத்தை, கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறனர். மேலும், இரண்டு மாணவிகள் தற்கொலை முயற்சி தொடர்பாக கல்லூரியின் விடுதி வார்டன் மற்றும் விடுதி ஊழியர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

’வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின்விநியோகம் நிறுத்தம்’..! - அமைச்சர் செந்தில் பாலாஜி

Fri Aug 5 , 2022
சீரான மின் விநியோகம் வழங்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”சீரான மின் விநியோகம் வழங்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கனமழையால், வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 12 இடங்களில் மரம் விழுந்ததால் 150 மின்மாற்றிகள் சேதமாகியுள்ளது. இன்று மாலைக்குள் மரங்கள் […]
’வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மின்விநியோகம் நிறுத்தம்’..! அமைச்சர் செந்தில்பாலாஜி

You May Like