தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக அதிக இடங்களை கைப்பற்றினாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்கவில்லை.. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை.. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றாலும் விஜய் இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும்.. எனவே தவெகவின் 107 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.. காங்கிரஸ் 5, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 4 என தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது.. விஜய் ஆட்சியமைக்க இன்னும் 2 இடங்கள் தேவைப்படுகிறது..
இதனிடையே விஜய் தமிழக ஆளுநரை இரண்டு முறை சந்தித்து உரிமை கோரினார். தனிப்பெரும் கட்சியாக இருக்கிறோம் என்று உரிமை கோராமல், கூட்டணி ஆட்சி என்று விஜய் உரிமை கோரியதால் பெரும்பான்மையை காட்டினால் தான் ஆட்சியமைக்க முடியும் என்று ஆளுநர் கூறிவிடார்.. அதாவது 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால் தான் ஆட்சியமைக்க முடியும் என்று ஆளுநர் கூறிவிட்டார்..
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்தார்.. ஆட்சி அமைக்க உரிமை கோரி ஏற்கனவே 2 முறை ஆளுநரை சந்தித்த நிலையில் தற்போது 3-வது முறையாக ஆளுநரை சந்தித்து பேசினார்.. சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் வழங்கினார்..
இந்த நிலையில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கடைசி நேரத்தில் அறிவித்துள்ளது.. ஐயூஎம்எல் கட்சி ஆதரவை அடுத்து விஜய் ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற பெரும்பான்மை பலம் கிடைத்தது..
இதையடுத்து தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.. ஆட்சியமைக்க 118 பேரின் ஆதரவு நாளை கிடைத்ததால் பதவியேற்பு விழா நடத்த வேண்டும் என்று விஜய் தரப்பில் ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது..
ஆட்சியமைக்க 118 பேரின் ஆதரவு கிடைத்ததால் நாளை விஜய் முதல்வராகிறார்.. சென்னை நேரு விளையாட்டரங்கில் விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தெரிகிறது.. நாளை காலை 11 மணியளவில் விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது..



