“விஜய்யால் ஆட்சியை பிடிக்க முடியாது.. எம்.ஜி.ஆர் செய்தது விஜய்க்கு சாத்தியப்படாது..” திருமாவளவன் பளிச் பதில்..!

vijay thiruma 1

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. அதிமுக கூட்டணியில் பாஜக, அன்புமணி பாமக, அமமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. மறுபுறம் திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக கூறப்படுகிறது.. தேமுதிகவும் திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.. தங்களுக்கு இரட்டை இலக்கங்களில் தொகுதி வேண்டும் என்று தேமுதிக கேட்கிறது.. ஆனால் அதிகபட்சமாக 4 முதல் 5 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என்று திமுக உறுதியாக தெரிவித்துள்ளது.. மேலும் ராமதாஸின் பாமக தரப்பும் திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது..


இந்த நிலையில் ராமதாஸ் தரப்பு திமுக கூட்டணியில் இணைந்தால் விசிக கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று அக்கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. பாஜக மதத்தின் அடிப்படையிலான வெறுப்பு அரசியலை சிறுபான்மையினருக்கு எதிராக பரப்புகிறது.. பாமக சாதி அடிப்படையிலான வெறுப்பு அரசியலை தலித்களுக்கு எதிராக பரப்புகின்றனர்..

இந்த மாதிரி சமூகங்களுக்கு இடையில் வெறுப்பை விதைத்து பிளவுபடுத்தக் கூடிய, நிலையை பகையை வளர்க்க கூடிய இந்த 2 கட்சிகளோடு எந்த காலத்திலும் தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம்.. இந்த கட்சிகள் இடம்பெறும் அணியில் இடம்பெற மாட்டோம் என்ற முடிவை நாங்கள் ஏற்கனவே எடுத்துவிட்டோம்..” என்று கூறினார்.

மேலும் விஜய்யால் ஆட்சியை பிடிக்க முடியுமா? என்ற கேள்விக்கு திருமாவளவன் பதிலளித்தார்… அப்போது “ இந்த தேர்தலில் புதிதாக பேசப்படுவது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.. விஜய் ஒரு புகழ்பெற்ற ஹீரோ.. அதனால் அவர் வெற்றி பெற்று விடுவார் என்றெல்லாம் ஒரு தரப்பில் விவாதிக்கப்படுகிறது.. திரைப்பட புகழ் பெற்ற கதாநாயகன், கதாநாயகிகள் வந்தால் கூட எடுத்த எடுப்பில் அவர்களால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை.. அது எம்.ஜி.ஆராக இருந்தாலும் சரி.. இவற்றை எல்லாம் விஜய் மற்றும் அவரின் கட்சியோடு ஒப்பிடும் போது, அது சாத்தியப்படாத ஒன்று..

மக்களை சந்திப்பது, வாக்குகளை சேகரிப்பது, ஆதரவான வாக்காளர்களை கொண்டு வந்து வாக்குச்சாவடிகளில் சேர்ப்பது போன்ற இந்த நடைமுறைகளில் அவர்களால் எந்தளவு வெற்றிகரமாக செயல்பட முடியும் என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது.. பெரும்பாலும் அதற்கு வாய்ப்பு இல்லை.. இந்த தேர்தலில் அதிமுக ஒரு வலுவான கூட்டணியாக இன்னும் உருவாகவில்லை என்பதும், நடிகர் விஜய் இன்னும் முழுமையான அரசியல் சக்தியாக மாறவில்லை என்பதும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு சாதகமான சூழலையே தருகிறது..” என்று தெரிவித்தார்..

Read More : பிப்.17-ல் தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் தாக்கல்.. சபாநாயகர் அறிவிப்பு..!

RUPA

Next Post

ஆன்லைனில் ஆபாச வீடியோ தேடிய நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..! ஏன்னா அதில் இருந்ததே அவர் தான்..!

Sat Feb 7 , 2026
இணையத்தில் சாதாரணமாக ஆபாச வீடியோக்களை தேடிய ஒரு நபருக்கு, அது பயங்கர கனவாக மாறிய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. அந்த வீடியோவில் தோன்றிய ஜோடி அவரும் அவரது காதலியும் என்பதைக் கண்டறிந்ததும், அவர் அதிர்ச்சியடைந்தார். 2023ஆம் ஆண்டு, ஹாங்காங்கைச் சேர்ந்த எரிக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது காதலி எமிலியுடன் தென் சீனாவின் ஷென்ஜென் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். சில வாரங்களுக்குப் பிறகு, அவர் வழக்கமாக பயன்படுத்தும் ஒரு […]
hotel room spy cam

You May Like