விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.. முன்னதாக நடைபெற்ற மாநாடு மற்றும் செயற்குழு கூட்டத்தில் திமுக, பாஜகவை தவெக தலைவர் விஜய் நேரடியாக விமர்சித்தார். இதன் மூலம் திமுக பாஜக உடன் கூட்டணி கிடையாது என்பதை திட்டவட்டமாக அறிவித்தார். தவெக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் அவர் கூறினார்.
எனினும் பாஜகவும், அதிமுகவும் மீண்டும் மீண்டும் தவெகவிற்கு கூட்டணியில் இணைய அழைப்பு விடுத்து வருகின்றன.. ஆனால் அதனை தவெக மறுத்து வருகிறது.. எனினும் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறும் பட்சத்தில், அதிமுக உடன் கூட்டணி அமைக்கலாம் எனக் கூறப்பட்டது. இதனிடையே கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் மத்திய அரசை விமர்சிப்பதை நிறுத்தி திமுகவை குறி வைத்து விமர்சனங்களை அதிகரித்து வருகின்றார்.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் அரசியல் நகர்வு குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைய வாய்ப்பே இல்லை என உறுதியான நிலைப்பாட்டில் இருந்த தவெக, பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நிலைபாட்டை மாற்றியதாக கூறப்படுகிறது. புதிய கட்சியாக இருப்பதால் தனித்துப் போட்டியிட்டால் வாக்குகள் கிடைக்கும் என்றாலும் வெற்றிக்கு போதாது என்பதையும் பீகார் முடிவுகள் சிந்திக்க வைத்துள்ளது.
ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட சில அரசியல் ஆய்வாளர்களும் விஜய் தனியாக போட்டியிட்டால் அதிக வாக்குகள் கிடைக்கும், ஆனால் வெற்றி கிடைக்காது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் சேர்ந்து 50 தொகுதிகளில் போட்டியிட்டால் 40 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று கணித்துள்ளனர். அதன்படி விஜய் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைவாரா..? அல்லது தனித்து போட்டியிடுவாரா என்பது வரும் காலங்களில் தெரியவரும்.
Read more: ஒரு நாளைக்கு 2 சிகரெட்கள் குடிப்பது உங்கள் இதயத்தை சேதப்படுத்தும்; ஆபத்து 50% அதிகரிக்கும்..!



