மீண்டும் படத்தில் நடிக்க விஜய் முடிவு..! இந்த 3 பேரில் ஒருவர் தான் டைரக்டர்..! குஷியில் ரசிகர்கள்..!

vijay jananayagan

விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக பொங்கலுக்கு வெளியாகவில்லை.. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடியது தயாரிப்பு நிறுவனம்.. எனினும் இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வராததால் மீண்டும் சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டிக்கே படத்தை படக்குழு அனுப்பியது..


ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் படத்தை பார்த்து வெளியீடு தொடர்பாக முடிவெடுக்க சென்சார் கமிட்டி பரிந்துரை செய்ததது. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தது.. இந்த நிலையில், நேற்றைய தினம் ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது படக்குழு மற்றும் விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பட தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

எனினும் விஜய் தரப்பே ஜனநாயகன் படத்தை லீக் செய்திருக்கக் கூடும் என்ற விவாதமும் சமூக வலைதளங்களில் ஒருபுறம் நடந்து வருகிறது.. அதாவது, தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஜனநாயகன் படம் விஜய்க்கு மிகப்பெரிய பிரச்சாரமாக அமையும்.. மேலும் ஜனநாயகன் படம் லீக் ஆனதால் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏற்பட்ட இழப்பை சரி செய்ய விஜய் மீண்டும் நடிக்க வருவார் என்று கூறப்பட்டது..

அதனை உறுதி செய்யும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. ஆம்.. விஜய் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக் ஆனதால் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.. இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு விஜய் மேலும் ஒரு படம் நடித்து கொடுக்க வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் கோரிக்கை விடுத்தார்..

இந்த சூழலில் ஜனநாயகன் படத்தால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய விஜய் மேலும் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. எனவே ஜனநாயகன் படத்தை தயாரித்த கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்ய மீண்டும் ஒரு படத்தில் நடிக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

அந்த படம் தான் விஜய்யின் கடைசிப் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.. மேலும் விஜய்யின் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ், அட்லி அல்லது நெல்சன் ஆகியோரில் ஒருவர் இயக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. எது எப்படியோ விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் என்று காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது..

Read More : விஜய்க்கு அடுத்த ஆப்பு..! சங்கீதா எடுத்த அதிரடி முடிவு..! வெளிவரப் போகும் பல அதிர்ச்சி உண்மைகள்..!

RUPA

Next Post

வாஸ்து சாஸ்திரப்படி இந்த கலர் காரை வாங்கீராதீங்க.. மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்..!

Mon Apr 13 , 2026
According to Vastu Shastra, do not buy this color car.. it will cause bad consequences..!
vastu 1

You May Like