பள்ளி மாணவர்கள் முதல் கர்ப்பிணி பெண்கள் வரை.. தவெக மாநாட்டிற்கு வர வேண்டாம்..!! – விஜய் அன்பு வேண்டுகோள்

TVK Vijay new

மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டிற்கு பள்ளி மாணவர்கள் யாரும் வரவேண்டும் என தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் முதல் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.. முன்னதாக நடந்த தவெகவின் செயற்குழு கூட்டத்தில் திமுக, பாஜக உடன் கூட்டணி கிடையாது என்பதை விஜய் திட்டவட்டமாக அறிவித்தார். தவெக தலைமையில் கூட்டணி அமையும் என்றும் அவர் கூறினார். இதனிடையே தவெகவின் இரண்டாவது மாநாடு ஆகஸ்ட் 25 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் என அறிவித்தார்.

இந்த நிலையில் மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டிற்கு பள்ளி மாணவர்கள் யாரும் வரவேண்டும் என தவெக தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களுடன் மக்களாக இணைந்து நிற்க்கும் ககத்தான மக்களரசியல் இயக்கமான தவெக மீதான தமிழ் நாட்டு மக்களின் பேரன்பும், பேராதரவும் அரசியல் களத்தில் விரைவில் நிரூப்பிக்கபட போகிறது. நமது கனவு நனவாக இலைக்கை எட்ட புரட்டிப்போட போகும் புரட்சி நிகழ இன்னும் சில மாதங்களே உள்ளன.

1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவுகளை 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இந்த மண்ணில் காண போகிறோம். மாபெரும் மக்கல் சக்தியான நீங்கள் இந்த திருப்பு முனைத் தருணத்தை நிரூபிக்க போவது நிச்சயம். இதை 32 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இயக்கமாக இருந்து தினம் தினம் மக்கள் மனம் அறிந்து உணர்ந்து வரும் நாம் சொல்வதில் அடர்ந்த அழ்ந்த உண்மை இருப்பதை அனைவரும் அறியத்தான் போகிறார்கள்.

தமிழக மக்களை உயிர்ழாக போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். உங்கள் மீதான உள்ளன்பு மிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றை சொல்ல விரும்புகிறேன். கப்பிணி பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல் நலம் குன்றியோர், பள்ளி மாணவர்கள், மாற்று திறனாளிகள் ஆகியோர் நம் கழக மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்கு திரும்பும்போதும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவ கட்டுப்பாட்டுடன் கடைபிடிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது கடமை” என தெரிவித்துள்ளார்.

Read more: திடீர் ட்விஸ்ட்.. அமமுகவில் இணையும் ஒபிஎஸ்..? கிரீன்சிக்னல் தரும் டிடிவி தினகரன்..!!

English Summary

Vijay has appealed to school students to attend the TVK conference being held in Madurai.

Next Post

பெற்றோர்களே..!! இதை கவனிக்காம விட்டா உங்க குழந்தைக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் வரும்..!! மருத்துவர்கள் எச்சரிக்கை..!!

Mon Aug 18 , 2025
முந்தைய தலைமுறையினரிடம் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்ற சிக்கல்கள் வயதானவர்கள் சந்திக்கும் பிரச்சனையாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைய சூழலில், இவையெல்லாம் வயதைக் கடந்து, குழந்தைகளின் வாழ்க்கையில் அடிக்கடி வரத் தொடங்கியுள்ளன. பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யும் போது கூட, சிலரிடம் இன்சுலின் எதிர்ப்பு, உயர் இரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு அதிகம் போன்ற அறிகுறிகள் தென்படும் நிலைக்கு நாம் வந்து விட்டோம். குழந்தைகள் இன்று உணவாக சாப்பிடுவது […]
Childrens 2025

You May Like