விஜய் செல்லும் இடமெல்லாம் திமுக எதிர்ப்பு என்ற பெயரில் விஜய் வெறுப்பு அரசியலை விதைத்து வருகிறார் விசிக தலைவர் திருமாவளவன் சாடி உள்ளார்..
திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ விஜய் பேசுவது திமுக எதிர்ப்பு அல்ல.. திமுக வெறுப்பு.. அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு காவல்துறை நிபந்தனைகள் விதிப்பது இயல்பு தான்.. நிபந்தனைகள் என்பது விஜய்க்கு புதிதாக இருக்கலாம்.. எங்களுக்கு அல்ல.. 35 ஆண்டுகளாக இது எங்களுக்கு பழகிவிட்டது.. எல்லா கட்சிகளுக்கும் அளிக்கப்படும் நிபந்தனைகள் தான் அவருக்கும் அளிக்கப்படுகிறது.. அவருக்கு காவல்துறையோ அல்லது அரசோ எந்த நெருக்கடி தருவதாக எனக்கு தெரியவில்லை.
சுதந்திரமாக பயணிக்கிறார்.. சுதந்திரமாக பேசுகிறார்.. திமுக எதிர்ப்பு என்பதை விட திமுக வெறுப்பை விதைக்கிறார்.. தான் செய்யப் போகிறேன் என்று இதுவரை விஜய் பேசியதாக தெரியவில்லை.. திமுக அரசுக்கு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எதிரான வெறுப்பு அரசியலை விஜய் முன்வைக்கிறார்.. வெறுப்பு அரசியல் பெரும்பாலும் எடுபடாது.. விஜய்யின் செயல்திட்டங்கள், அவரின் எதிர்கால திட்டங்கள் குறித்து அவர் என்ன பேசுவார் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.. ஆனால் அதை பற்றி அவர் பேசியதாக தெரியவில்லை..
ஈழ தமிழர் பிரச்சனை உச்சத்தில் இருந்த காலத்தில் விஜய் எதுவும் பேசியதாக தெரியவில்லை.. 35 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்காக எண்ணற்ற போராட்டங்கள் பேரணிகள் நடந்திருக்கின்றன.. விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள், மாநாடுகள், பேரணிகள் கணக்கில் அடங்காதவை.. இன்றைக்கு திடீரென ஈழத் தமிழர்கள் பற்றி விஜய் பேசும் வெறும் அரசியலுக்காக தான். இந்த உணர்வு உண்மையான உணர்வாக இருந்திருந்தால் அது அப்போதே வெளிப்பட்டிருக்க வேண்டும்..” என்று தெரிவித்தார்..
Read More : Flash : “சீமான் நடிகை இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டு வழக்கை முடிக்காவிடில்…” உச்சநீதிமன்றம் எச்சரிக்கை!



