இன்று ரசிகர்களை சந்திக்கிறார் விஜய்..!! அரசியல் குறித்து நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை..?

அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் விஜய் இன்று சந்திக்கிறார்.


விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார். அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்ட நிர்வாகிகளை அவர் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பானது சென்னை, பனையூரில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ரசிகர்களை சந்திக்கிறார் விஜய்..!! அரசியல் குறித்து நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை..?

இந்த சந்திப்பின் போது, மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து அறிவுரைகளை வழங்குவார் என கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நாமக்கல், சேலம், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளை கடந்த மாதம் விஜய் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ரசிகர்களுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

CHELLA

Next Post

#திண்டுக்கல்: விளையாட சென்ற பள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து பலி..!

Tue Dec 13 , 2022
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள நல்லாம்பிள்ளையில் பழனிசாமி என்பவர் தனது மகன் பிரமோத்(14) என்பவருடன் வசித்து வருகிறார். சிறுவன் சிங்காரப்பேட்டையில் இருக்கும் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  நேற்று விடுமுறை என்பதால் பிரமோத் தனது நண்பர்களுடன் அருகில் இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளான். இதனை தொடர்ந்து தோட்டத்திலுள்ள 80 அடி ஆழ கிணற்றில் நண்பர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது நீச்சல் தெரியாத சிறுவன் கிணற்றின் சுவரில் அமர்ந்து […]
n451291578167090927791926b3f5695ae557f99cb2d5f42987399fa8fa98ecb50a38308739a881ef8db507

You May Like