10 பிரபல யூடியூபர்கள்‌ மற்றும்‌ கன்டென்ட்‌ கிரியேட்டர்களின்‌ வீடுகளில் ரைடு…! வருமான வரித்துறை அதிரடி…!

கேரளாவில்‌ உள்ள நடிகை பேர்லி மானி உட்பட 10 பிரபல யூடியூபர்கள்‌ மற்றும்‌ கன்டென்ட்‌ கிரியேட்டர்களின்‌ வீடுகள்‌ மற்றும்‌ அலுவலகங்களில்‌ வருமான வரித்துறையினர்‌ அதிரடி சோதனை நடத்தினர். வீடியோ கன்டென்ட்‌ கிரியேட்டர்கள்‌ தங்கள்‌ வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்துவதில்லை என புகார்‌ வந்ததை அடுத்து சோதனை நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதன்முறையாக கேரளாவில் நடிகை பேர்லி மானி உள்ளிட்ட யூடியூப் பிரபலங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு தொடர்பாக 10க்கும் மேற்பட்ட யூடியூப் நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையின் புலனாய்வுக் குழு சோதனை நடத்தியது.

வருமான வரித்துறை அதிகாரிகள் முக்கிய யூடியூபர்களின் செயல்பாடுகள் மற்றும் வருமானத்தை அவதானித்த பின்னர் அவர்களின் பட்டியலை தயாரித்துள்ளனர். சில யூடியூபர்கள் விலையுயர்ந்த நிலம், கட்டிடங்கள் மற்றும் சொகுசு சொத்துக்களை வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

Vignesh

Next Post

நோட்...! அரசின் கல்வி உதவித்தொகை...! இந்த தேதிக்குள் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும்...! இல்லை என்றால் சிக்கல்...

Sat Jun 24 , 2023
ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின மாணாக்கர்களுக்கான போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால அவகாசம்‌ 30.06.2023 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; 2022-2023ஆம்‌ கல்வியாண்டில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறையின்‌ கீழ்‌ செயல்படுத்தப்படும்‌ மத்திய அரசு நிதி ஆதரவிலான போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை திட்டம்‌ மற்றும்‌ மாநில அரசு சிறப்பு போஸ்ட்‌ மெட்ரிக்‌ கல்வி உதவித்தொகை திட்டங்களின்‌ […]

You May Like