பிரத்யேக உறுப்பினர் சேர்க்கை செயலி.. நாளை அறிமுகம் செய்கிறார் விஜய்.. தவெக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

7il2srfg actor vijay ani 625x300 28 October 24 1

தவெகவின் உறுப்பினர்‌ சேர்க்கைக்கான பிரத்யேகச்‌ செயலியை நாளை அக்கட்சி தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளார்.

தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக மக்களின்‌ நலனை எதிர்நோக்கி, மக்கள்‌ விரும்பும்‌ முதல்வர்‌ வேட்பாளர்‌, வெற்றித்‌ தலைவர்‌ திரு. விஜய்‌ அவர்கள்‌ தலைமையில்‌, தமிழகத்தில்‌ ஆட்சி மாற்றத்திற்கான நடவடிக்கைகளைத்‌ தமிழக மக்களின்‌ ஏகோபித்த ஆதரவோடு நாம்‌ மேற்கொண்டு வருவதை அனைவரும்‌ அறிவீர்கள்‌. அதன்‌ ஒரு பகுதியாக நமது கழகத்தில்‌ உறுப்பினர்களைச்‌ சேர்க்கும்‌ பணியை மேற்கொள்ள, உறுப்பினர்‌ சேர்க்கை அணியை நம்‌ வெற்றித்‌ தலைவர்‌ அவர்கள்‌ ஏற்கெனவே அறிவித்துள்ளார்‌.


இந்த நடவடிக்கையின்‌ அடுத்த கட்டமாக, கடந்த செயற்குழுவில்‌ நிறைவேற்றப்பட்ட
தீர்மானத்தின் படி இரண்டு கோடி உறுப்பினர்களைத்‌ தமிழக வெற்றிக் கழகத்தில்‌
இணைக்கும்‌ வகையில்‌, நாளை (30.07.2025) காலை 11 மணி அளவில்‌ உறுப்பினர்‌ சேர்க்கைக்கான பிரத்யேகச்‌ செயலி அறிமுக நிகழ்வு, நடைபெற உள்ளது.

சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச்‌ செயலகத்தில்‌ மக்கள்‌ விரும்பும்‌ முதல்வர்‌ வேட்பாளர்‌, நம்‌ வெற்றி தலைவர்‌ அவர்கள்‌ இந்தப்‌ பிரத்யேகச்‌ செயலியை மக்களுக்கு அறிமுகம்‌ செய்து வைத்து உறுப்பினர்‌ சேர்க்கைப்‌ பணியைத்‌ துவக்கி வைக்க உள்ளார்‌.

ஏற்கனவே https:tvk.family என்ற இணையத்தளம்‌ வாயிலாக பொதுமக்கள்‌ தங்களை
தமிழக வற்றிக்‌ கழகத்தில்‌ உறுப்பினராக இணைத்துக்‌ கொள்ளும்‌ நடைமுறை தொடர்ந்து செயல்பாட்டில்‌ இருப்பதை அனைவரும்‌ அறிவீர்கள்‌. தற்போது நம்‌ வெற்றித்‌ தலைவர்‌ அவர்கள்‌ அறிமுகப்‌ படுத்தும்‌ இந்தச்‌ செயலி வாயிலாகவும்‌ பொதுமக்கள்‌ தாங்களை கழகத்தில்‌ இணைத்துக்கொள்ளலாம்‌.

மேலும்‌ தமிழக வெற்றிக்‌ கழகத்தில்‌ இருக்கக்கூடிய 69 ஆயிரத்திற்கும்‌ அதிகமான வாக்குச்சாவடி முகவர்கள்‌ ஒவ்‌வாொருவரும்‌ தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில்‌ உள்ள அனைத்து வீடுகளிலும்‌ நேரில்‌ என்றும்‌ கழகத்தில்‌ உறுப்பினர்களைச்‌ சேர்க்கும்‌ பணிகளை மேற்கொள்வார்கள்‌.

அது மட்டுமல்லாமல்‌, இந்தச்‌ செயலி வாயிலாகக்‌ கழகத்தின்‌ அனைத்து நிலை நிர்வாகிகள்‌ மற்றும்‌ வாக்குச்சாவடி முகவர்கள்‌ உள்ளிட்ட அனைவரையும்‌ ஒரு குடையின் கீழ்‌ கொண்டு வந்து, கழகத்தில்‌ உறுப்பினர்களைச்‌ சேர்க்கும்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட உள்ளன. ஆகவே, நாளை நடைபற உள்ள உறுப்பினர்‌ சேர்க்கைச்‌ செயலி அறிமுகக்‌ கூட்டத்திற்குத்‌ தமிழக வெற்றிக்‌ கழகத்தின்‌ மாவட்டச்‌ செயலாளர்கள்‌ மற்றும்‌ உறுப்பினர்‌ சேர்க்கை அணியின்‌ நீர்வாகிகள்‌ ஆகியோர்‌ மட்டும்‌ நேரில்‌ வந்து கலந்துகொள்ள வேண்டும்‌ என்றும்‌, வெற்றித்‌ தலைவர்‌ அவர்களின்‌ வழிகாட்டுதல்களைப்‌ பின்பற்றி, உறுப்பினர்‌ சேர்க்கைப்‌ பணியைத்‌ தீவிரப்படுத்த வேண்டும்‌ என்றும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.” என்று குறிப்பிட்டுள்ளார்.

RUPA

Next Post

“ வக்கற்ற இந்த ஆட்சியை அகற்றுவதே, தமிழ்நாட்டை மீட்பதற்கான முதற்படி..” இபிஎஸ் காட்டம்..

Tue Jul 29 , 2025
சட்டம் ஒழுங்கையே காக்க வக்கற்ற இந்த ஆட்சியை அகற்றுவதே , தமிழ்நாட்டை மீட்பதற்கான முதற்படி என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.. திருநெல்வேலி மாவட்டம் பாப்பகுடி பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அங்கு காவல்துறையினர் விசாரணைக்கு சென்றுள்ளனர்.. பாப்பாக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் சண்முகசுந்தரம் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தினருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது.. இந்த மோதல் குறித்து […]
puthiyathalaimurai 2024 03 b36f000c 4144 4c99 8019 2d65ed6ad568 5

You May Like