புஸ்ஸி ஆனந்திற்கு செக் வைத்த விஜய்? தவெகவில் கைமாறும் பவர்? பரபர தகவல்கள்!

Vijay Bussy Anand 2025

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு பயணத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.. இதை தொடர்ந்து விஜய்யும், தவெகவினரும் கரூரில் இருந்து சென்றதும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது..


தவெக முக்கிய நிர்வாகிகள் தலைமறைவான நிலையில், விஜய்யும் எந்த அறிக்கையும் வெளியிடாமல் இருந்து வந்தார்.. சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின் வீடியோ வெளியிட்ட அவர் கரூர் சம்பவத்திற்கு வருத்தமோ மன்னிப்போ கேட்காமல் சினிமா டயலாக் பேசியதும் விமர்சிக்கப்பட்டது.. இதை தொடர்ந்து தவெக தரப்பிலோ அல்லது விஜய் தரப்பிலோ எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.. இதனிடையே கரூர் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போது நீதி வெல்லும் என்று விஜய் பதிவிட்டிருந்தார்..

கரூர் சம்பவம் நடந்து சரியாக ஒரு மாதம் ஆன நிலையில் விஜய் நேற்று முன் தினம் பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரம் வரவழைத்து ஆறுதல் கூறினார்.. தன்னை பார்க்க வந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மக்களை நேரில் சென்று சந்திக்காமல் அவர்களை வரவழைத்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விஜய்யின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்..

விஜய்யின் தவெக கட்சி முடங்கிய நிலையில், தற்போது மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.. மேலும் தவெகவின் நிர்வாக குழுவை அமைத்து உத்தரவிட்டார்.. தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாட பணிகள், செயல்பாடுகளை புதிதாக நிர்வாக குழு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக விஜய் கூறியிருந்தார்… என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், சி.டி.ஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்ட 28 பேர் அதில் இடம்பெற்றுள்ளனர்ர்..

இந்த நிர்வாக குழுவில் புஸ்ஸி ஆனந்த் எதிர்ப்பாளர்கள் 3 பேருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.. இந்த 3 பேரும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சியின் ஆதரவாளர்கள் என்றும் கூறப்படுகிறது.. இவர்கள் 3 பேரும் ஆனந்திற்கு முன்பே விஜய் ரசிகர்கள் மன்றத்தில் இருப்ப்வர்களாம்.

கரூர் சம்பவத்திற்கு பின் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவானதால் தவெக கட்சியினர் அதிருப்தியில் இருந்தனர்.. மேலும் ஆனந்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து தவெகவினரே பதிவிட்டு வந்தனர்.. இந்த சூழலில் தான் புஸ்ஸி ஆனந்திற்கு செக் வைக்கும் விதமாக அவருக்கு எதிரானவர்களை நிர்வாக குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் புஸ்ஸி ஆனந்தின் செயல்பாடுகள் சரியில்லை என்பதால் அவரின் அதிகாரம் படிப்படியாக குறைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது..

இதனிடையே தவெகவின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 5-ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று விஜய் அறிவித்துள்ளார்.. இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : Flash : “வருங்காலம்‌ நமதென்று காட்ட தீர்க்கமாகத்‌ திட்டமிடுவோம்‌..” தவெக பொதுக்குழுவுக்கு தேதி குறித்த விஜய்.. அதிரடி அறிவிப்பு..

RUPA

Next Post

“என் பொண்டாட்டி கூட பழகுறத இதோட நிறுத்திக்கோ”..!! கள்ளக்காதலனை விடாத மனைவி..!! கணவர் செய்த பயங்கரம்..!!

Wed Oct 29 , 2025
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு (25). இவர், திருவேற்காடு அடுத்த மேல் அயனம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணியாற்றி வந்தார். நேற்று மதியம் டில்லிபாபு பணிபுரியும் நிறுவனத்திற்கு 2 நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் டில்லிபாபுவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த நபர்களில் ஒருவர் மறைத்து வைத்திருந்த […]
Crime 2025 15

You May Like