தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தற்போது அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது அனைத்து வாகனங்களிலும் ஒரே எண்ணைப் பயன்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. விஜய் தற்போது ஓட்டிவரும் பிஎம்டபிள்யூ EV, லெக்சஸ் LM, டொயோட்டா உள்ளிட்ட கார்கள் மட்டுமல்லாமல், அவருக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பிரச்சார வாகனத்திலும் அதே எண் இடம்பெற்றுள்ளது.
- பிஎம்டபிள்யூ EV – TN 14 AH 0277
- லெக்சஸ் LM – TN 14 AL 0277
- டொயோட்டா – TN 14 AM 0277
- பிரச்சார வாகனம் – TN 14 AS 0277
இந்த “0277” என்ற எண் வெறும் சாதாரண எண் அல்ல. அதற்குப் பின்னால், விஜயின் உணர்ச்சி பூர்வமான நினைவு ஒன்று உள்ளது. விஜயின் தங்கை வித்யா, சிறு வயதிலேயே உயிரிழந்தார். அவரின் பிறந்த நாள் 14-02-1977. அந்த நினைவாகவே, தன் வாழ்நாளில் எப்போதும் தங்கையை அன்புடன் நினைவுகூரும் வகையில், விஜய் தனது அனைத்து வாகனங்களிலும் “0277” என்ற எண்ணைப் பயன்படுத்தி வருகிறார்.
இது, வெறும் தனிப்பட்ட பிணைப்பை மட்டுமல்லாது, விஜய் தனது அரசியல் பயணத்தையும் குடும்ப பாசத்தையும் இணைத்துக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது. விஜயின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில், “தளபதி தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியலிலும் உண்மையைப் பின்பற்றுகிறார்”
“தங்கையின் நினைவை சின்னமாக்கி, குடும்ப பாசத்தை மக்களிடம் பகிர்ந்து வருகிறார்” என்று பாராட்டி வருகின்றனர்.
அரசியல் உலகில் தலைவர்கள், தங்கள் வாழ்வின் முக்கிய எண்கள் அல்லது தேதிகளை சின்னமாக்கிக் கொள்வது சாதாரணம் தான். ஆனால், விஜய் தனது தங்கையின் பிறந்த நாளை அடையாளமாக்கி, அரசியல் பயணத்தில் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது, அவரது தனிப்பட்ட உணர்வுகளையும், அரசியல் சின்னத்தையும் இணைக்கும் தனித்துவமான முயற்சி எனக் கூறப்படுகிறது.