உஷார்.. தமிழ்நாட்டில் வேகமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்.. மீண்டும் மாஸ்க்.. சுகாதாரத்துறை அட்வைஸ்!

virus fever mask 1

தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களாக வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளதால் மாஸ்க் அணியுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது..

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.. குறிப்பாக சென்னை, கோவை, தென் மாவட்டங்கள் என பல இடங்களில் அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.. பகல் நேரத்தில் வெயில் வெளுத்து வாங்கும் நிலையில் மாலை அல்லது இரவில் மழையும் பெய்து வருகிறது. இந்த திடீர் காலநிலை மாற்றம் சளி, காய்ச்சல் போன்ற பருவகால நோய் பாதிப்பை அதிகரித்துள்ளது..


சென்னையில் கடந்த சில நாட்களில் சளி, காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, இருமல் போன்ற நோய்களால் பலரும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதனால் சிகிச்சையில் பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது..

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களாக வைரஸ் காய்ச்சல் அதிகரித்துள்ளதால் மாஸ்க் அணியுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.. வயதானவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மக்கள் அதிகமாக கூடும் செல்வதை தவிர்க்க வேண்டும்.. மற்றவர்களும் கூட்ட நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்லும் போது கவனமாக இருக்கவும், முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சளி, காய்ச்சல், இருமல், தொண்டைவலி அறிகுறி உள்ளவர்களின் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும், அடிக்கடி கைகளை கழுவவும் சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.. எனினும் இந்த வைரஸ் காய்ச்சல் பரவல் தொடர்பாக யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது..

RUPA

Next Post

“என்ன நடிப்பு.. ஆஸ்கரே கொடுக்கலாம்..” பிரதமர் மோடி பேசிய போது, அழுத பாஜக தலைவர்.. நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

Tue Sep 2 , 2025
தனது தாயார் ஹீராபென்னை அவதூறாக பேசிய எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கடுமையாகக் கண்டித்தார். பிரதமர் மோடி உரையின் போது, ​​பீகார் பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத்ஹார்.. அவரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை தூண்டி உள்ளது.. பிரதமர் மோடி என்ன சொன்னார்? பீகாரில் உள்ள மகா கூட்டணியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார். எதிர்க்கட்சித் தலைவர்கள் இப்போது தனது […]
pm modi bjp bihar

You May Like