சென்னையில் உள்ள மாநகர போக்குவரத்து கழகம் (MTC), ஐடிஐ தகுதியுடையவர்களுக்கு பொன்னான வாய்ப்பை அறிவித்துள்ளது. மொத்தம் 500 காலிப்பணியிடங்களுக்கு 1 வருட தொழிற்பயிற்சி வழங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.14,000 உதவித்தொகை வழங்கப்படும்.
காலிப்பணியிடங்களின் விவரங்கள்:
மெக்கானிக்கல் மோட்டார் வாகனம் 373
மெக்கானிக் டீசல் 40
எலெக்ட்ரீஷியன்/ ஆட்டோ எலெக்ட்ரீஷியன் 33
வெல்டர் 14 ஃபிட்டர் 40
கல்வித்தகுதி: 2025-26ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த போக்குவரத்து துறை தொழிற்பயிற்சிக்கு ஐடிஐ தகுதி பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம். மெக்கானிக் மோட்டார் வாகனம், மெக்கானிக் டீசல் வாகனம், எலெக்ட்ரீஷியன், ஆட்டோ எலெக்ட்ரீஷியன், ஃபிட்டர், டர்னர், பெயிண்டர் மற்றும் வெல்டர் ஆகிய தொழிற்பிரிவுகளில் ஐடிஐ தகுதி பெற்றிருக்க வேண்டும்.
சிறப்பு முகாம்: குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளில் 500 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் நேரடியாக சிறப்பு முகாம் மூலம் பெறப்பட உள்ளது. மாநகர போக்குவரத்து கழகம் மூலம் குரோம்பேட்டையில் உள்ள தொழிற்பயிற்சி பள்ளியில் செப்டம்பர் 10-ம் தேதி முகாம் நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொண்டு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த தகுதியும் ஆர்வமுள்ள ஐடிஐ தகுதிப் பெற்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொண்டு சிறப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். முகாமில் கலந்துகொள்ளும் நபர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தொழிற்பிரிவிற்கு ஏற்ப ஆட்கள் தேர்வு செய்யப்ப்படுவார்கள் என கருதப்படுகிறது. மேலும், தேர்வு முறை மற்றும் இதர விவரங்கள் குறித்து முகாமில் நேரடியாக அறிந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குரோம்பேட்டை பள்ளியில் பயிற்சி அளிக்கப்படும்.
Read more: ‘Nothing’ நகரத்தை காண குவியும் சுற்றுலா பயணிகள்.. அப்படி அங்க என்ன இருக்கு..? தெரிஞ்சா ஷாக் ஆவீங்க..