மத்திய அரசின் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் தொழிற்பயிற்சி.. ஐடிஐ படித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்..!!

job 1 1

மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. இங்கு ராணுவத்திற்கான ஏவுகணை, ஆயுதங்கள், கருவிகள் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் ஃபிட்டர், எலெக்ட்ரிக்கல், மெக்கானிஸ், டர்னர், வெல்டர் உள்ளிட்ட தொழிற்பிரிவுகளில் 156 இடங்கள் நிரப்பப்பட உள்ளனர்.


தொழிற்பயிற்சி விவரங்கள்

  • ஃபிட்டர் – 70
  • எலெக்ட்ரிஷியன் – 10
  • எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் – 30
  • மெக்கானிஷ்ட் – 15
  • மெக்கானிஷிட் கிரிண்டர் – 2
  • மெக்கானிக் டிசல் – 5
  • டர்னர் – 15
  • வெல்டர் – 4

வயது வரம்பு: தொழிற்பயிற்சி பெற விரும்புவோர் 08.12.2025 தேதியின்படி அதிகபடியாக 30 வயதைக் கடந்திருக்கக்கூடாது. மத்திய அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு.

கல்வித்தகுதி: இப்பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு/ எஸ்எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், அந்தந்த தொழிற்பிரிவுகளில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித்தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 10ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது? ஐடிஐ தகுதிப் பெற்றவர்கள் இதற்கான அறிவிப்பை https://bdl-india.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். தொடர்ந்து, https://www.apprenticeshipindia.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக தொழிற்பயிற்சிக்கு பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்பப்பட வேண்டிய முகவரி

Manager (HR) Apprentice,

Bharat Dynamics Limited, Kanchanbagh, Hyderabad – 500 058.

விண்ணப்பிக்க கடைசி நாள் 08.12.2025.

Read more: Breaking : 12 மணி நேரத்தில் அடுத்த புயல்.. தமிழகம் நோக்கி நகரும்.. சென்னைக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட்!

English Summary

Vocational training at the central government’s Bharat Dynamics company.. Super chance for ITI graduates..!!

Next Post

இப்படி புதினா சாப்பிட்டால் உடல் எடை விரைவில் குறையும்.. ஒரு மாதம் ட்ரை பண்ணி பாருங்கள்..!

Thu Nov 27 , 2025
If you eat mint like this, you will lose weight quickly.. Try it for a month..!
mint

You May Like