கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல்காந்த் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.. இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. குறிப்பாக 2024 மக்களவை தேர்தல், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன..
கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து பேசினார்.. மேலும் அதற்கான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டார்.. கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதியில் 1 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகவும், வாக்காளர் பட்டியலில் முகவரி என்ற இடத்தில் 0 என்று போடப்பட்டுள்ளது எனவும், ஒரு வீட்டில் 80 வாக்காளர்கள் வசித்ததாகவும் கூறியிருந்தார்.. அதே போல் ஒரே பெயர் மற்றும் முகவரில் பல வாக்காளர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.. 80 வயது முதியவர் ஒருவர் புதிய வாக்காளராக சேர்க்கப்பட்டிருந்தார்.. வாக்காளரின் தந்தை பெயரில் ரேண்டமாக ஆங்கில எழுத்துகள் இடம்பெற்றிருந்தன என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி முன் வைத்தார்..
பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து தேர்தல்களை திருடி, வாக்கு திருட்டில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.. ஆனால் அவரின் இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்திருந்தது.. மேலும் தான் கூறிய குற்றச்சாட்டுகள் உன்மையானவை என்று ராகுல் காந்தி பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும், இல்லை எனில் தான் பொய் சொல்வதாக கூறி பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்ததது.
இதனால் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத் தன்மையே கேள்விக்குறியாகி உள்ளது..
இந்த நிலையில் வாக்குத் திருட்டு தொடர்பான அடுத்த கட்ட பட்டியலை வெளியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் தொகுதி வாரியாக எவ்வளவு வாக்குகள் திருடப்பட்டுள்ளது என்பது குறித்து ராகுல்காந்தி விளக்கம் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.. அதுமட்டுமல்ல, 7 அல்லது 8 கட்டங்களாக இதுதொடர்பான பட்டியலை வெளியிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
இந்த பட்டியல் வெளியாகும் போது, அடுத்தடுத்த அணுகுண்டுகள் வெடிக்கப் போகிறது என்பது தெளிவாகிறது.. தேர்தல் ஆணையம் இதனை எப்படி எதிர் கொள்ளப்போகிறது? பாஜக எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..