வெயிட் பண்ணுங்க..!! தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழ் சரியும்..!! பொருளாதார நிபுணர்கள் சொன்ன குட் நியூஸ்..!!

gold price nn

கடந்த சில வாரங்களாக தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்திருந்தது, சாமானிய மக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. தங்கம் இனி எட்டா கனியாகிவிடுமோ என்று கவலைப்பட்டவர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக, கடந்த ஜனவரி 29 தங்கத்தின் விலை படிப்படியாகச் சரியத் தொடங்கியுள்ளது. தற்போது ஒரு சீரான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், விரைவில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாய்க்குக் கீழ் குறையக்கூடும் என்ற அதிரடி தகவல் வெளியாகியுள்ளது. இந்த எதிர்பாராத விலை வீழ்ச்சிக்கு பின்னால் ரஷ்யா எடுத்துள்ள ஒரு மிக முக்கியமான பொருளாதார முடிவு இருப்பதாகக் கூறப்படுகிறது.


உலகளவில் புவிசார் பதற்றங்கள் மற்றும் தங்கத்தின் மீதான அதீத மோகம் காரணமாக விலை உச்சத்தில் இருந்தது. ஆனால், தற்போது அந்தச் சூழல் மெல்ல தணிய தொடங்கியுள்ளது. குறிப்பாக, சர்வதேச வர்த்தகத்தில் மீண்டும் அமெரிக்க டாலரை பயன்படுத்த ரஷ்யா முடிவு செய்திருப்பதாக ‘ப்ளூம்பெர்க்’ (Bloomberg) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல், உலக தங்க சந்தையை அதிர வைத்துள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் டாலருக்கு மாற்றாக தங்கத்தை அதிகளவில் வாங்கிச் சேமித்து வந்தன. ஆனால், இப்போது ரஷ்யா மீண்டும் டாலர் அடிப்படையிலான வர்த்தகத்திற்குத் திரும்புவது, டாலரின் மதிப்பை வலுப்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவடையும் போது, சர்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து அதன் விலை சரிவது இயல்பானது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.1,15,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், டாலரின் இந்த எழுச்சி இந்தியச் சந்தையில் தங்கத்தின் விலையை ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் கொண்டு வரும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Read More : நாளை இடைக்கால பட்ஜெட்..!! மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க திமுக அரசு போட்ட மெகா பிளான்..!! என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்..?

CHELLA

Next Post

தாய் வழி சொத்தில் கணவர், பிள்ளைகளுக்கு உரிமை உள்ளதா..? உயில் இல்லாத பட்சத்தில் என்ன செய்வது..?

Mon Feb 16 , 2026
குடும்பங்களில் சொத்துத் தகராறுகள் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம், உயில் எழுதப்படாததும் மற்றும் வாரிசுரிமைச் சட்டங்கள் குறித்த தெளிவற்ற புரிதலுமே ஆகும். பொதுவாக, தந்தையின் சொத்து என்பது ‘மூதாதையர் சொத்து’ (Ancestral Property) என்றும், அதில் ஒரு குறிப்பிட்ட வாரிசுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றும் பலர் தவறாக கருதுகின்றனர். ஆனால், இந்தியச் சட்டப்படி வாரிசுகள் முறைப்படுத்தப்பட்ட பட்டியலின் (Systematic Order) கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஒரு பெண் இறந்துவிட்டால், […]
Registration 2026

You May Like