நடைபயிற்சி பல வழிகளில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தினமும் நடப்பவர்களுக்கு மன அழுத்தம் குறைவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. நடைபயிற்சி உடலுக்கு மட்டுமல்ல, மனதுக்கும் நல்லது. இது எடை இழப்பு, இதய ஆரோக்கியம், கொழுப்பு எரித்தல் மற்றும் கால் உடற்பயிற்சி போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
உடல்நலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், மக்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க புதிய உடற்பயிற்சி முறைகளில் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், தற்போது உலகம் முழுவதும், குறிப்பாக இந்திய நகரங்களிலும் பெரும் கவனம் பெறும் நோர்டிக் நடைபயிற்சி (Nordic Walking) ஒரு புதிய டிரெண்டாக மாறியுள்ளது.
நோர்டிக் நடைபயிற்சி என்றால் என்ன? ஃபின்லாந்தில் கோடைக்கால பயிற்சியாக உருவான இந்த நடைப்பயிற்சி, பனிச்சறுக்கு விளையாட்டில் பயன்படுத்தப்படும் சிறப்பு கம்பிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறது. பாரம்பரிய நடைப்பயிற்சியைவிட இது மேலும் விரிவான, பல உறுப்புகளை ஒரே நேரத்தில் இயக்கும் பயிற்சி ஆகும்.
நிபுணர்களின் கூற்றுபடி, இந்த நடைப்பயிற்சியில் உடலின் 90% தசைகள் இயக்கப்படுகின்றன. வழக்கமான நடைப்பயிற்சியைவிட 46% அதிக கலோரிகள் எரிந்து உடல் எடை குறைக்க உதவுகிறது. மூட்டுகளில் அழுத்தம் குறைவாக இருப்பதால், முதியோருக்கும் பாதுகாப்பானது.
நன்மைகள்:
- ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலை மேம்பாடு
- மனஅழுத்தம் குறைப்பு
- முதுமை பிரச்னைகள், முதுகுவலி, கணுக்கால் வலி போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு
- உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல முடியாதவர்கள், வெளிப்புற இயற்கையோடு இணைந்து ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள், அனைவருக்கும் ஏற்ற ஒரு பயிற்சி
நோர்டிக் நடைபயிற்சி, உடல்நலத்தை மேம்படுத்துவதோடு மனஅழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது. இது பெரும்பாலானவர்களுக்கு பாதுகாப்பான, எளிதில் மேற்கொள்ளக்கூடிய மற்றும் விளையாட்டு மகிழ்ச்சியோடும் கூடிய புதிய உடற்பயிற்சி முறையாக உள்ளது.
Read more: பயங்கர விபத்து! டேங்கர் மீது மோதியதால் தீப்பிடித்து எரிந்த LPG சிலிண்டர் லாரி; ஒருவர் பலி; Video!



