இன்றைய வாழ்க்கைமுறையில் பெரும்பாலானோர் ஜிம், யோகா, அல்லது வெளிநாட்டு உடற்பயிற்சி முறைகள் என்பதையே உடல் ஆரோக்கியத்திற்கான வழியாகக் கருதுகின்றனர். ஆனால், நம் நாட்டின் சித்தர்கள் மற்றும் யோகிகள் பரிந்துரைத்த “8 வடிவ நடைப்பயிற்சி” (Infinity Walk) இன்று உலகளவில் மீண்டும் பிரபலமடைந்து வருகிறது.
ஜிம் செல்லத் தேவையில்லை, விலைமதிப்புள்ள உபகரணங்களும் வேண்டாம். தினமும் 30 நிமிடம் 8 வடிவ நடைப்பயிற்சி செய்தாலே உடல் நலமும் மன அமைதியும் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எப்படி செய்ய வேண்டும்? இந்த நடைப்பயிற்சியை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 15 நிமிடங்கள், பின்னர் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி 15 நிமிடங்கள் என தினமும் மேற்கொள்ளலாம். இதற்கு 6 அடி அகலம், 8–10 அடி நீளம் கொண்ட பாதை அமைத்தால் போதும். பாதை 8 வடிவில் அமைக்கப்பட வேண்டும். அதில் சிறிய கூழாங்கற்கள் பதித்து, வெறும் காலில் நடப்பது முக்கியம். இதனால் பாதத்தின் மையப் பகுதிகளில் ஏற்படும் அழுத்தம், உடலின் உள்ளுறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை தூண்டி, முழு உடலையும் புத்துணர்ச்சி பெறச் செய்கிறது.
எப்போது செய்யலாம்? இந்த நடைப்பயிற்சியை காலையில் வெறும் வயிற்றில் அல்லது மாலை நேரத்தில் திறந்த வெளியில் மேற்கொள்வது சிறந்தது. உடல் சக்தி, சுவாச திறன், செரிமானம் ஆகியவை சீராகும்.
கிடைக்கும் அசாதாரண நன்மைகள்:
- சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்
- இதய ஆரோக்கியம் மேம்படும்
- மலச்சிக்கல், தைராய்டு, உடல் பருமன், முழங்கால் வலி, முடக்கு வாதம் போன்ற பிரச்சனைகள் குறையும்
- இரத்த ஓட்டம் சீராகி, முகத்தில் இயல்பான இளமையுடன் பிரகாசம் வரும்
- கண் பார்வை மேம்பட்டு, கண் அழுத்தம், பார்வை மங்கல் குறையும்
- நரம்பு மண்டலம் வலுவடையும், மன அழுத்தம் குறையும்
யாருக்கு பொருந்தாது? கர்ப்பிணிப் பெண்கள், புற்றுநோயாளிகள், அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் அல்லது தீவிர உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனையின்றி இந்த நடைப்பயிற்சியைத் தொடங்கக் கூடாது.