எடை குறைக்க முயற்சி செய்பவர்கள் தினமும் 20,000 அடிகள் நடந்தால், அவர்களின் எடையிழப்பு செயல்முறை வேகமாகும் என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மருத்துவ நிபுணர்கள் தெரிவிப்பதாவது, ஒரு நாளில் அதிக அளவில் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எரித்து, மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. இதனால், உடலின் எடை குறைவதோடு, இதய ஆரோக்கியமும் மேம்படும்.
பொதுவாக, ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பது ஆரோக்கியத்திற்கு போதுமானதாகக் கருதப்படுகிறது. ஆனால் அதனை 20,000 அடிகள் வரை அதிகரித்தால், அதன் பலன் இரட்டிப்பாகும். உடலில் சதை சேர்வது குறையும், இரத்த ஓட்டம் சீராகும் மற்றும் இரவு நேர தூக்கமும் சிறப்பாக இருக்கும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இதனைச் செய்ய சிரமமாக இருக்கும். எனவே, முதலில் 2,000 முதல் 3,000 படிகள் நடந்து துவங்கி, படிப்படியாக 10,000 அடிகளை எட்டிச் செல்லலாம். பின்னர், அதை 20,000 அடிகள் வரை உயர்த்தி கொள்ளலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இத்தகைய நடைப்பயிற்சியால் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பு குறையும்.
20 ஆயிரம் அடிகள் நடப்பதன் நன்மைகள்:
மன ஆரோக்கியம்: ஒரு நாளில் 20,000 அடிகள் நடப்பது உடலை மட்டுமல்ல, மனதையும் மாற்றுகிறது. மன அழுத்தம், பதட்டம் மற்றும் கவலை குறைகிறது என்று உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன. இது மனநலனுக்கும் உறக்கத்துக்கும் நன்மை அளிக்கிறது.
மூட்டுகள் மற்றும் தசைகள் வலிமை: தினசரி 20,000 அடிகள் நடப்பது உடல் பாகங்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. வாரத்தில் ஒரு முறை கூட இதனை தொடர்ச்சியாக செய்தால், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற மூட்டுப் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
எடை இழப்பு: 20,000 அடிகள் நடப்பதால் 500 முதல் 1,000 கலோரிகள் வரை எரிகின்றன. இதனால் எடை குறைய வாய்ப்பு அதிகரிக்கிறது. ஆனால் எடை இழப்பு ஒவ்வொருவரின் உடல் அமைப்பு, நடை வேகம், மற்றும் பாதை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.
நீரிழிவு கட்டுப்பாடு: தினமும் 10,000 முதல் 20,000 அடிகள் நடப்பது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இது டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
20,000 அடிகள் நடப்பது ஆரோக்கியத்திற்கே சரி, ஆனால் அதை ஒரே நாளில் அடைய முயற்சிக்கக் கூடாது. உடல் சோர்வடைய வாய்ப்பு உள்ளது. எனவே, போதுமான தண்ணீர் குடிக்கவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு உட்கொள்ளவும், சரியான காலணிகளை அணியவும். தவறான காலணிகள் எலும்பு வலி மற்றும் காயங்களுக்கு காரணமாகலாம்.
Read more: இந்தியாவில் இதுவரை எத்தனை தற்கொலைப் படை தாக்குதல்கள் நடந்துள்ளன? முழு லிஸ்ட் இதோ..



