அரசு வேலை வேண்டுமா..? 484 காலிப்பணியிடங்கள்.. 10, 12, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

job 2

புதுச்சேரியில் வசிப்போருக்கு அரசு வேலை நாடுவோருக்கான மிக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்களை ஒரே கட்டமாக நிரப்புவதற்காக ஒங்கிணைந்த தேர்வுகள் (Combined Exams) மூன்றுக்கும் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு இந்த ஆண்டு நிரப்ப உள்ள பணியிடங்களுக்கு மூன்று வகை தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன:

  • ஒங்கிணைந்த பட்டப்படிப்பு தகுதித் தேர்வு (CGL)
  • ஒங்கிணைந்த 12-ம் வகுப்பு தகுதித் தேர்வு (CHSL)
  • ஒங்கிணைந்த 10-ம் வகுப்பு தகுதித் தேர்வு (CSL)

புதுச்சேரி CGL தேர்வு 2025

பணியிடங்கள்: மொத்தம் 327

பட்டப்படிப்பு தகுதி பெற்றவர்களுக்கு CGL தேர்வு வாயிலாக கீழ்க்கண்ட பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுகிறது:

  • புள்ளியியல் ஆய்வாளர்
  • நூலகம் மற்றும் தகவல் உதவியாளர்
  • விவசாய அதிகாரி
  • தொழில்நுட்ப அதிகாரி
  • விவசாய அதிகாரி (பொறியியல்)
  • விவசாய அதிகாரி (நீர்வளவியல்)
  • உயர்நிலை எழுத்தர்
  • கள மேற்பார்வையாளர்

பிரிவு வாரியாக காலியிடங்கள் (327):

  • பொதுப் பிரிவு – 142
  • எம்பிசி – 57
  • எஸ்சி – 52
  • ஒபிசி – 32
  • பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (EWS) – 31
  • இதர பிரிவுகள் – மீதமுள்ள இடங்கள்

வயது வரம்பு: அதிகபடியான வயது வரம்பு என்பது 30 – 32 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டிற்கு ஏற்ப வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி: இத்தேர்விற்கு பொருளாதாரம், புள்ளியியல், கணிதம், வேளாண், தோட்டக்கலை, மெக்கானிக்கல், சிவில், புவியியல் ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், தொழிற்சாலை, உற்பத்தி, வேதியியல், எலெக்ட்ரிக்கல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், ஜவுளி ஆகியவற்றில் டிப்ளமோ முடித்தவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

புதுச்சேரி CHSL தேர்வு 2025: கலை மற்றும் கலாச்சார துறையின் கலைஞர் – 1 மற்றும் கீழ்நிலை எழுத்தர் – 129 என மொத்தம் 130 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: கலைஞர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். கீழ்நிலை எழுத்தர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

புதுச்சேரி CSL தேர்வு 2025:

  • ஜூனியர் நூலகர் – 26 காலிப்பணியிடங்கள்
  • கேலரி உதவியாளர் – 1 காலிப்பணியிடம்

வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி: இத்தேர்விற்கு அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். கல்வித்தகுதியான 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது? ஆர்வமுள்ளவர்கள் https://recruitment.py.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.  புதுச்சேரியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 5 வருடங்களாக புதுச்சேரியில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.12.2025

Read more: “குழந்தை இல்லனு குத்தி காட்டுறாங்க.. நா போறேன்.. நீயும் வந்துடும்மா..!” கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை..!

English Summary

Want a government job? 484 vacancies.. 10th, 12th, degree graduates can apply..!

Next Post

அசிங்கமான அவதூறு வார்த்தைகள்.. மாணவியின் புகார்களை கண்டுகொள்ளாத ஆசிரியைகள்.. CBSE விசாரணையில் பகீர் தகவல்..

Fri Nov 21 , 2025
ஜெய்ப்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் 9 வயது மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இதுகுறித்து சிபிஎஸ்இ (CBSE) விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையில், பள்ளியின் பாதுகாப்பு விதிமுறைகளில் பெரும் அலட்சியம் இருந்தது தெரியவந்துள்ளது.. மேலும் இந்த சம்பவத்துக்கான உடனடி நடவடிக்கைகளிலும் கடுமையான குறைபாடுகள் இருந்தது என்பது கண்டறியப்பட்டுள்ளது.. உயிரிழந்த மாணவி தொடர்ந்து சக மாணவர்களின் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாகி […]
jaipur student

You May Like