ரிசர்வ் வங்கியின் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்கள் வங்கி நிர்வாகத்தின் மூலம் அவ்வபோது நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரிசர்வ் வங்கியின் Grade-B Officer பதவியில் மூன்று பிரிவுகளில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பணியிட விவரம்:
அதிகாரி (DR) General – 83
அதிகாரி (DR) Economic and Policy Research Dept – 17
அதிகாரி (DR) Statistics and Information Management – 20
வயது வரம்பு: ஜூலை 1-ம் தேதியின்படி, குறைந்தபட்சம் 21 முதல் அதிகப்படியாக 30 வயது வரை இருக்கலாம். எம்.பில் அல்லது பிஎச்.டி முடித்தவர்களுக்கு அதிகபடியாக 32 மற்றும் 34 வயது வரை தளர்வு உள்ளது. மத்திய அரசு விதிமுறைகளின் அடிப்படையில் வயது வரம்பு தளர்வு பின்பற்றப்படும்.
கல்வித்தகுதி:
General (DR-General) பிரிவு:
* ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு
- பொதுப்பிரிவு: 60% மதிப்பெண்கள்
- எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகள்: 50% மதிப்பெண்கள்
* முதுகலைப் பட்டப்படிப்பு பெற்றவர்கள்
- பொதுப்பிரிவு: 55% மதிப்பெண்கள்
- எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகள்: pass class போதும்
* CA (Chartered Accountant) தகுதி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
DEPR (Department of Economic and Policy Research)
* பொருளாதாரம் / நிதி / பொருளாதார அளவீடு (Economics / Finance / Econometrics) தொடர்பான முதுகலைப் பட்டப்படிப்பு – குறைந்தது 55% மதிப்பெண்கள்.
* MBA (Finance) / PGDM (Finance) பெற்றவர்களும் தகுதி.
* கற்பித்தல் அல்லது ஆராய்ச்சி (Teaching / Research) அனுபவம் உள்ளவர்களுக்கு:
* அதிகபட்சம் 3 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும்.
DSIM (Department of Statistics and Information Management)
* புள்ளியியல் / கணிதம் / பொருளாதார அளவீடு (Statistics / Mathematics / Econometrics) தொடர்பான முதுகலைப் பட்டப்படிப்பு அல்லது M.Stat (Master of Statistics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரிசர்வ் வங்கியின் கிரேடு-பி பதவிகளுக்கு அடிப்படை சம்பளம் ரூ.55,200 ஆகும். ரூ.55,200 முதல் ரூ.99,750 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ரிசர்வ் வங்கி அதிகாரி பதவிக்கு மூன்று கட்ட தேர்வு முறை பின்பற்றப்படும்.
முதல் நிலைத்தேர்வு: முதல்நிலைத் தேர்வு மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் நடைபெறும். பொது அறிவு, நுண்ணறிவு, ஆங்கிலம் மற்றும் காரணம் ஆகியவற்றின் அடிப்படையில் கொள்குறி வகையில் நடைபெறும். இது தகுதித் தேர்வு மட்டுமே.
முதன்மை தேர்வு: முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்விற்கு தகுதி அடைவார்கள். முதன்மைத் தேர்வு பொருளாதாரம், சமூக பிரச்சனை, ஆங்கிலம், நிதி மற்றும் மேனேஜ்மெண்ட் ஆகிய பாடங்களுடன் கொள்குறி மற்றும் எழுதுதல் இரண்டும் கலந்து நடைபெறும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும்.
நேர்முக தேர்வு: முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் பெற்ற மதிபெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் https://opportunities.rbi.org.in/ அல்லது https://www.rbi.org.in/ என்ற இணையதளங்களில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி: செப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் அக்டோபர் 18 முதல் டிசம்பர் 7 வரை நடைபெறும்.
Read more: உங்களுக்கு நோயே வரக்கூடாதா..? அப்படினா இந்த பாரம்பரிய உணவுகளை அதிகம் சேர்த்துக்கோங்க..!!