உங்கள் பற்கள் ஆரோக்கியமாகவும், வெள்ளையாகவும் இருக்க வேண்டுமா? என்ன செய்யலாம்? இதை படிங்க….!!

மஞ்சள் பல் வெள்ளையாக மாற இயற்கை வழியில் என்னவெல்லாம் செய்யலாம், ஆரோக்கியமாகவும் பற்களை அழகாகவும் பராமரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிப்பில் பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் இருக்கும் உணவு முறை பழக்க வழக்கத்தால் எளிதில் பற்கள் பாதிக்கப்பட்டுவிடுகிறது.குறிப்பாக மது அருந்துவது, புகைப்பிடிப்பது, போதை பொருட்கள் பயன்படுத்துவது, மற்றும் பேக்கரி உணவு வகைகள் மூலம் பற்களின் நிறம் மாறிவிடுகிறது.

குறிப்பாக பற்கள் மஞ்சள் நிறமாக மாறி விடுவதால் முகத்தோற்றம் முழுவதும் கெட்டுவிடுகிறது. மஞ்சள் நிறமாக மாறி உள்ள உங்கள் பற்களை இயற்கை வழிகள் மூலம் எளிமையாக வெள்ளை நிறமாக மாற்றலாம்.பல் வலி, பல் சொத்தை, பல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் எளிமையாக குணப்படுத்தலாம்.

பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு முக்கிய காரணம்: பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் உங்களுடைய வயது, உங்களுடைய பரம்பரை வியாதி, சரியான முறையில் பல் துலக்காமல் இருப்பது.

அதிக அளவில் டீ, காபி, சிகரெட், மது அருந்துவது மற்றும் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால்.பற்கள் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது அதுமட்டுமில்லாமல் பற்கள் சொத்தை, பல் சம்பந்தமான, ஈறுகள் சம்பந்தமான பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கிறது.

ஆரோக்கியமான பற்களுக்கு கொய்யா இலை: தினமும் இரண்டு கொய்யா இலையை வாயில் போட்டு நன்றாக மெல்லவேண்டும் நன்றாக மென்று பின் அவற்றின் சாரை துப்பிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும், பல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாகிவிடும்.

ஆரோக்கியமான பற்களுக்கு சோற்றுக்கற்றாழை : சோற்றுக் கற்றாழையை எடுத்து  பற்களில்  மீண்டும்  நன்றாக  தடவி  சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் வாய் கொப்பளித்தால் பற்கள் வெண்மையாக மாறி விடும். அது மட்டுமில்லாமல் வாயில் இருக்கும் கிருமிகள் பாக்டீரியா பூஞ்சைகள் முழுவதும் அழிந்துவிடும்.

ஆரோக்கியமான பற்களுக்கு கேரட் : தினமும் இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் பற்கள் வெண்மையாக மாறி விடும், சொத்தை பல் இருந்தால் குணமாகிவிடும், மேலும் முகம் வெள்ளையாக மாறுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.

ஆரோக்கியமான பற்களுக்கு அப்பிள் : தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் நீங்கி பற்கள் வெண்மையாக மாறிவிடும்.

ஆரோக்கியமான பற்களுக்கு உப்பு : உப்பை சுடுநீரில் போட்டு நன்றாக கலக்கி பிறகு வாய் முழுவதும் நன்றாக கொப்பளிக்க வேண்டும், இவ்வாறு செய்து வந்தால் பல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.

தினமும் பற்களை துலக்க பயன்படுத்தப்படும் பற்பசை சிறிது சாம்பல் சேர்த்து பின் நன்றாக பற்களை துலக்கினால் பற்கள் வெள்ளையாகும். அதிலும் இதனை தினமும் 2 முறையாக செய்து வந்தால் விரைவில் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.

Next Post

பெரும் சோகம்...! புகழ்பெற்ற பிரபல எழுத்தாளர் உயிரிழப்பு...! அரசியல் தலைவர்கள் இரங்கல்...!

Sun Oct 30 , 2022
லோக்தந்திரிக் ஜனதா தளம் அரசியல் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரேந்திர குமார் மனைவி உஷா காலமானார். அவருக்கு வயது 82. இவர் புகழ்பெற்ற எழுத்தாளரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த எம்.பி வீரேந்திர குமாரின் மனைவியாவார். பெல்காமைச் சேர்ந்த பாபுராவ் குண்டப்பா லெங்கடே மற்றும் பிரமிளா ஆகியோருக்குப் பிறந்த உஷா, 1958 ஆம் ஆண்டு வீரேந்திர குமாரை தனக்கு 18 வயதாக இருந்தபோது திருமணம் செய்து கொண்டார். அன்று முதல், […]

You May Like