உஷார்..! இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித் தீர்க்கும்.. வானிலை மையம் வார்னிங்!

rainfall 1699931590800 1704797100426

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.. இதன் காரணமாக இன்று ஈரோடு, சேலம், தரும்புரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், செங்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..


நாளை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறு நாள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 19-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..

இன்று முதல் செப்.18 ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

சென்னையை பொறுத்த வரை வானம் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.. நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செலசியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இன்று முதல் 20ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.. இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்..” என்று தெரிவித்துள்ளது..

Read More : Flash : “பாமக தலைவர் ராமதாஸ் தான்.. அன்புமணி மாமல்லபுரத்தில் கூட்டிய பொதுக்குழு செல்லாது..” ஜி.கே மணி பதிலடி!

RUPA

Next Post

“என் மகன் வாழ்க்கையே நாசமா போச்சு”..!! ஆசிரியருடன் உல்லாசமாக இருந்த மருமகள்..!! குடிபோதையில் மாமனார் செய்த பயங்கரம்..!!

Tue Sep 16 , 2025
தேனி மாவட்டம் ஆர்.எம்.டி.சி. காலனியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் சதீஷ்குமார் (42). இவருக்கும், பள்ளி ஆசிரியரான ராஜப்பிரியா என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால், ராஜப்பிரியா அவருடன் பணிபுரியும் மற்றொரு ஆசிரியருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இந்த விவகாரம் கணவர் சதீஷ்குமாருக்கு தெரியவந்த நிலையில், அவர் தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால், ராஜப்பிரியா தனது உறவை கைவிடவில்லை. இதனால், சதீஷ்குமார் […]
Teacher Sex 2025

You May Like