உஷார்!…ஹேர் கலரில் மறைந்திருக்கும் ஆபத்து!… என்ன தெரியுமா?

Hair color: தலைமுடியைக் கட்டி மலையைக்கூட இழுக்கலாம் என்ற பழமொழி பெண்களுக்கு மட்டுமல்ல. அந்தகாலத்தில் தலைமுடிகள் மிகவும் ஆரோக்கியமாக இருந்துள்ளது. வெந்தயமும், கரம்பை மண்ணும் தான் அவர்களின் ஷாம்புகளாக இருந்துள்ளது. ஆனால் இன்றைக்கு நிலை முற்றிலும் மாறிவிட்டது. முன்பெல்லாம் வெள்ளை முடியை மறைக்க டை அடிப்பார்கள். அதை பலர் வீட்டிலேயே செய்துகொள்வார்கள்.

இப்போது வெள்ளை முடி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அழகுக்காக வண்ணங்கள் கொண்ட ஹேர் கலரிங் செய்துகொள்கிறார்கள். இது ஸ்டைலான தோற்றத்தையும், அவர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது. இது நம் தோற்றத்திற்கு அழகு சேர்க்கிறது என்றாலும் மார்க்கெட்களில் பலவிதமான ஹேர் டை கிடைக்கிறது, இதில் 100% ரசாயனம் மட்டுமே உள்ளது. அது நம் உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

முடியின் நிறத்திற்கு மெலனின் மற்றும் கரோட்டின் மிக முக்கியமாக தேவைப்படுகிறது. விட்டமின் குறைபாடு, மன அழுத்தம் ,உடல் சூடு மற்றும் பரம்பரை என முடியின் நிற மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது . மார்க்கெட்டுகளில் கிடைக்கும் ஒரு சில ஹேர் டைகளில் அம்மோனியா இல்லை என போடப்பட்டிருக்கும்,அதை கவனத்தில் கொள்ள வேண்டும். அம்மோனியா இல்லை என்றால்முடி நிறம் மாற வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை. அம்மோனியாவின் அளவு குறைவாக இருக்கும்.

தொடர்ச்சியாக ஹேர் கலரிங் செய்யும்போது முடியின் வேர்க்கால்களில் செதில் செதிலாக காணப்படுவது, அரிப்பு, நெற்றி பகுதி கருப்பாக மாறுதல், கண் வீங்குதல், தலைவலி, காது பகுதிகளில் கொப்புளங்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். குறிப்பாக இது உள் உறுப்புகளுக்கும் கேடு விளைவிக்க கூடியது தான், மார்பக புற்றுநோய் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. கர்ப்பிணி பெண்கள் இதை பயன்படுத்தும் போது கருவில் உள்ள சிசுவிற்கு ஆபத்து மற்றும் கரு கலைப்பு உருவாக வாய்ப்புள்ளது.

தேங்காய் எண்ணெயை இரவில் உச்சி முதல் முடியும் நுனி வரை தேய்த்து காலையில் குளித்து வரலாம். இதனால் பாதிப்பு குறைய வாய்ப்புள்ளது. சருமத்தில் தடிப்பு உள்ள இடத்திலும் பூசலாம் . டீ ட்ரீ ஆயில் 3 ஸ்பூன் ,ஆலிவ் ஆயில் கால் ஸ்பூன் இரண்டையும் கலந்து லேசாக சூடாக்கி முடியின் வேர்க்கால்களில் மசாஜ் செய்து காலையில் குளித்து வந்தால் ஹேர் டைனால் ஏற்படும் அலர்ஜி குறையும்.

புதினா இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து நீர் ஆறியதும் தலை முடியில் தடவவும்.இதனால் பெரிதளவான தாக்கம் குறையும் . ஆகவே ரசாயனம் நிறைந்த ஹேர் டைகளை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கையான முறையில் முடிகளை பராமரிப்பது தான் நல்லது.

Readmore: டாட்டூக்களை உடனடியாக அகற்ற வேண்டும்!… இல்லையென்றால் கடும் நடவடிக்கை!… காவல்துறை அதிரடி!

Kokila

Next Post

அதிர்ச்சி செய்தி...! சாலை விபத்தில் சிக்கிய பிரபல இளம் நடிகர் உயிரிழப்பு...!

Thu Apr 11 , 2024
சாலை விபத்தில் சிக்கிய மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுஜித் ராஜேந்திரன் என்னும் மலையாள நடிகர் கடந்த சில நாட்களுக்கு முன் எர்ணாகுளத்தில் உள்ள ஆலுவா -பரவூர் சாலையில் விபத்தில் சிக்கினார். கேரளாவில் உள்ள தனியார் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுஜித் ராஜேந்திரன் 2018 […]

You May Like