9 மணிநேரத்திற்கு அதிகமாக தூங்கினால் மரணம் ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தூங்குவது என்பது சாதாரண செயல் போல தோன்றினாலும், அது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். இன்றைக்கு இளைஞர்கள் இரவு வெகு நேரம் கழித்துத் தூங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் தினமும் குறைந்தது 7 மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு உதவுகிறது. குழந்தைகள் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.
இன்றைக்கு இளைஞர்கள் இரவு வெகு நேரம் கழித்துத் தூங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் தினமும் குறைந்தது 7 மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம். இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு உதவுகிறது. குழந்தைகள் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். சிறு குழந்தைகள் மற்றும் புதிதாய் பிறந்த குழந்தைகளின் தூக்க அட்டவணை மாறுபடும். அவர்கள் ஒரு நாளில் பெரும்பான்மையான நேரத்தை தூக்கத்தில் கழிப்பார்கள்.
போதுமான தூக்கம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக வைத்திருக்கும். பகல் முழுவதும் உட்கார்ந்தும், நின்றும், பயணித்தும் மேலும் பல உடல் ரீதியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறோம். இரவில் 7 மணி நேரம் உடலின் அத்தனை புலன்களுக்கும் ஓய்வு தருவது முக்கியம். மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளுக்கு உடல் தன்னை தயார்படுத்திக் கொள்ள நல்ல ஆழமான தூக்கம் அவசியம்.
தினமும் இரவில் ஏழு மணி நேரம் தொடர்ந்து உறங்குபவர்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பார்கள் என்றும் அவர்களது நோய் எதிர்ப்பு அமைப்பு சீராக செயல்பட்டு உடலும் ஆரோக்கியமாக இருக்கும். நோய் தொற்று ஏற்படுவதும் குறையும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. மனிதர்களின் அறிவாற்றல் செயல்திறன், படைப்பாற்றல், ஒட்டுமொத்த மன ரீதியான செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கு குறைந்த பட்சம் 7 மணி நேர தூக்கம் அவசியம். இது ஒருவருடைய நினைவாற்றலை நன்றாக செயல்பட வைக்கிறது. மேலும் உணர்ச்சி ஒழுங்கு முறையையும் ஆதரிக்கிறது.
ஆனால், குறைவாக தூங்குவதைவிட அதிகமாக தூங்குவது பெரிய ஆபத்து என்று ஓக்லஹோமா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.7-8 மணி நேரம் வரை தூங்குபவர்களுடன் ஒப்பிடும்போது 7 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு இறப்பு ஆபத்து 14% இருப்பதாகவும், அதுவே 9 மணிநேரத்திற்கு மேல் தூங்குபவர்களுக்கு மரணம் ஏற்படுவதற்கான ஆபத்து 34% இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Readmore: ஆசிய கோப்பை போட்டிகளை நடுநிலையான இடத்தில் நடத்த ஓ.கே சொன்ன பிசிசிஐ.. இந்தியா – பாகிஸ்தான் போட்டி..