“ மீண்டும் அண்ணன் தம்பி போல் இணைந்துவிட்டோம்..” டிடிவி தினகரன் பேசிய போது சப்போர்டுக்கு வந்த இபிஎஸ்..!

ttv eps 2

மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நிறைவடைந்த நிலையில் கூட்டணி தலைவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.. எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.. அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி  “ தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது.. தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை.. கொலை, கொள்ளை நடக்காத நாள் இல்லை.. இது தான் திமுக ஆட்சியின் நிலை.. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது.. புதிய கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வரும்.. அப்படி வரும் போது நிச்சயம் தெரிவிப்போம்..” என்று தெரிவித்தார்..


இன்று தான் பாரத பிரதமர் மோடி இந்த பொதுக்கூட்டத்தில் அற்புதமாக பேசி இருக்கிறார்.. இன்னும் பல கூட்டங்களில் அவர் பேசுவார்.. நாங்கள் பல இடங்களில் பொதுக்கூட்டங்களில் கலட்ந்து கொண்டு பேச உள்ளோம்..” என்று தெரிவித்தார்..

தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன் “ எங்களுக்குள் இருந்தது குடும்பப் பிரச்சனை.. எங்களுக்குள் மனஸ்தாபம் இருந்தது உண்மை தான்.. எங்களுக்குள் பிரிவு இருந்தது.. அமித்ஷா அவர்கள் 2021-ல் முயற்சி செய்தார்கள் அப்போது நடக்காமல் போய்விட்டது.. தற்போது மோடி அவர்கள் நீங்களும் எடப்பாடி பழனிசாமி அவர்களும் ஒன்றாக இருந்து திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப எங்களுக்கு உதவ செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்.. எங்களோடு கூட்டணியில் இணைய வேண்டும் என்று கூறினார்.. அதற்கு ஒப்புக்கொண்டு வந்துவிட்டேன்..

அண்ணன் அவர்களும் அதற்கு ஒப்புதல் அளித்த பின்னர் தான் என்னிடம் பேசினார்கள்.. நாங்கள் இருவரும் அண்ணன் தம்பி போல், 2017 வரை எப்படி இருந்தோமோ அப்படி ஒன்றிணைந்துவிட்டோம். திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வராமல் விடமாட்டோம்.. ஒரு வளமான தமிழ்நாட்டை உருவாக்க நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.. அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவதற்கு பணியாற்றுவோம்..” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி “ வைகோ எந்தளவுக்கு திமுகவையும், ஸ்டாலினையும் விமர்சித்தார்.. எந்த தலைவரும் பேச முடியாத அளவுக்கு மோசமாக பேசிய வைகோ ஸ்டாலினுடன் இணைந்துவிட்டார்.. அதை பற்றி எல்லாம் ஏன் கேள்வி கேட்கவில்லை..” என்று தெரிவித்தார்..

Read More : பிரதமர் சொல்லும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது! திமுகவை அட்டாக் செய்த மோடிக்கு ஸ்டாலின் பதிலடி..!

RUPA

Next Post

ஜம்முவில் என்கவுண்டர்.. பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை..! இந்திய ராணுவம் அதிரடி..!

Fri Jan 23 , 2026
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) குழுவுடன் தொடர்புடைய ஒரு பாகிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்டார். இந்த மோதல் பில்லாவார் பகுதியில் நடந்தது. அங்கு பயங்கரவாதியை ஒழிப்பதற்காக பாதுகாப்புப் படையினர் கூட்டு நடவடிக்கையைத் தொடங்கினர் என்று ஜம்மு சரக காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பீம் சென் தூட்டி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் காவல்துறை தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளது.. […]
kashmir encounter

You May Like