கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்ததாக கூறப்பட்டவர்கள் தாங்கள் மனு தாக்கல் செய்யவே இல்லை என உச்சநீதிமன்றத்தில் மனு அளித்ததால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கரூருக்கு விஜய் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தவெக தலைவர் விஜய், அக்கட்சி நிர்வாகிகள், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் எனப் பல்வேறு தரப்பினர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதுகுறித்து கரூர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
அரசு தரப்பில் ஒருநபர் விசாரணை ஆணையமும், நீதிமன்றம் சார்பில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவும் அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் நடுநிலையான தீர்ப்பு கிடைக்காது என்று தவெக தரப்பு கருதுகிறது. இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்ததாக கூறப்பட்டவர்கள் தாங்கள் மனு தாக்கல் செய்யவே இல்லை என உச்சநீதிமன்றத்தில் புதிய மனு அளித்துள்ளனர். எங்களுக்கு தெரியாமலேயே உச்ச நீதிமன்றத்தில் எங்கள் பெயர்களில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கரூர் கூட்ட நெரிசலில் மகனை இழந்த பன்னீர்செல்வம், மனைவியை இழந்த செல்வராஜ் மற்றும் சகோதரியை இழந்த பிரபாகர் புதிய மனு அளித்துள்ளதால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
Read more: தினமும் அரை மணி நேரம் வாக்கிங் போனால் இளமையும் ஆயுளும் நீடிக்கும்..! – ஆய்வில் தகவல்..