வாக்குக்கு ரூ.2000 பணம் கொடுத்தோம்.. ஓபனாக பேசிய தவெக வேட்பாளர்.. பரபரப்பு..

tvk candidate

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட தவெக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைக்கு போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 10-ம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கான இலாகாக்கள், கடந்த 16-ம் தேதி ஒதுக்கப்பட்டன.


இதை தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றனர்.. அதன்படி மொத்தம் 35 அமைச்சர்கள் உள்ளனர்..

தவெக ஆட்சி அமைந்தது முதலே தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் நிர்வாகிகள் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.. இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதி வேட்பாளர் அதியமான கட்சி நிர்வாகிகளிடையே பேசிய பேச்சு சர்ச்சையாகி உள்ளது.. வாக்கிற்கு பணம் கொடுக்காததால் தான் தான் தேர்தலில் தோல்வி அடைந்ததாக பேசினார்..

அப்போது “ சேலம் மேற்கு தொகுதியில் ஒரு ஓட்டுகு ரூ.2000 பணம் கொடுத்தனர்.. இதனால் கடைசி 2 நாட்களில் மொத்தமாக பாதிப்பு ஏற்பட்டது.. நாம் வேலை பார்த்தது திட்டங்களை சொன்னது எல்லாம் பெயிலராகிவிட்டது.. பக்கத்து தொகுதியில் பணம் கொடுத்து, தாம் கொடுக்காததால் தோல்வி அடைந்தேன்.” என்று கூறினார்..

கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சியில் நடந்த நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வாக்கிற்கு பணம் கொடுக்காமல், ஜாதி மத என அனைத்தையும் உடைத்து வெற்றி பெற்றதாக முதல்வர் விஜய் பேசியிருந்தார்.. இந்த சூழலில் தவெக வேட்பாளர்களே பணம் கொடுத்தனர் என்றும் தான் பணம் கொடுக்காததால் தான் தோல்வி அடைந்ததாகவும் தவெக வேட்பாளர் பேசி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

RUPA

Next Post

Flash : அலிசா அப்துல்லா குறித்து ஆபாச பேச்சு.. திருச்சி சிவா அதிரடி கைது..!

Thu Jun 4 , 2026
பாஜக பிரமுகர் அலிசா அப்துல்லா நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.. அதில் “ யூடியூபர் முக்தார் மற்றும் முன்னாள் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா தன்னை பற்றியும், தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பற்றியும் அவதூறாக பேசுகின்றனர்.. தொடர்ந்து பெண்கள் பற்றி அவதூறாக பேசி வரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்று குறிப்பிட்டிருந்தார்.. அவரின் இந்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை கிளப்பியது.. இந்த […]
alisa trichy siva

You May Like