தெற்கு ஆபிரிக்காவில் உள்ள சுவாசிலாந்து மன்னர் தனது 15 மனைவிகள், 30 குழந்தைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் அபுதாபி விமான நிலையத்தில் பிரமாண்டமாக நுழையும் வீடியோ வைரலாகி வருகிறது.
தெற்கு ஆப்ரிக்காவில் உள்ள எஸ்வாட்டினி நாட்டின் மன்னர் மூன்றாம் மஸ்வாட்டி, ஆப்ரிக்காவின் கடைசி முழு அதிகார மன்னராக விளங்கி வருகிறார். 1986 முதல் எஸ்வாட்டினி நாட்டை ஆண்டு வரும் 57 வயதான இவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபி விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அதாவது, அவருடைய நாட்டின் பாரம்பரிய புலித்தோல் உடையிலும், அவரது 15 மனைவியர்கள், 30 குழந்தைகள் வண்ணமயமான ஆப்ரிக்க உடைகளிலும் அழகாக காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கியபோது, அங்கிருந்த ஊழியர்கள் கூட ஆச்சரியப்பட்டனர்.பொருளாதார ஒப்பந்தம் தொடர்பான பேச்சு நடத்துவதற்காக, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு அவர் வந்ததாக கூறப்படுகிறது.
இவரது தந்தை, முன்னாள் ஸ்வாசிலாந்து மன்னர், 125 மனைவியர் மற்றும் 210 குழந்தைகள், 1,000 பேரக்குழந்தைகளை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தற்போதைய மன்னர் மூன்றாம் மஸ்வாட்டிக்கு 30 மனைவியர் உள்ளனர். ஆனால் இந்த பயணத்தில், 15 மனைவியர் மட்டுமே உடன் வந்தனர். இவருக்கு, 35க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ‘ரீட் டான்ஸ்’ எனும் பாரம்பரிய விழாவில் புதிய மனைவியை மன்னர் தேர்ந்தெடுக்கும் பழக்கம், உலகளவில் விமர்சனத்தையும் பெற்றுள்ளது.
சுமார் 150 பேர் கொண்ட மன்னரின் அரச பரிவாரங்களை தங்க வைக்க பாதுகாப்பு அதிகாரிகள் பல முனையங்களை மூட வேண்டியிருந்தது. இதற்கிடையில், இந்த வீடியோ, மன்னர் மீது பரவலான விமர்சனத்தைத் தூண்டியது. மன்னர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வர, எஸ்வாட்டினியில், 60 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர். நாட்டில் வறுமை மற்றும் பொருளாதார சவால்கள் இருக்கும் நிலையில், மன்னர் மஸ்வாட்டி உள்நாட்டிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற எம்ஸ்வதி, பாரம்பரிய பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாணல் நடன விழாவின் போது அவர்கள் ஒரு புதிய மணப்பெண்ணைத் தேர்ந்தெடுப்பதாகக் கூறப்படுகிறது. இது சுவாசிலாந்து அரச குடும்பத்திற்குள் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியமாகும்.
எம்ஸ்வதிக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது? அறிக்கைகளின்படி, எம்ஸ்வதிக்கு 1 பில்லியன் டாலர் (ரூ. 8,800 கோடி) மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. அவருக்கு பல ஆடம்பரமான அரண்மனைகள், சொகுசு கார்கள் மற்றும் ஒரு தனியார் ஜெட் விமானம் உள்ளன. மன்னர் மகத்தான செல்வத்தை அனுபவித்தாலும், சுவாசிலாந்து மக்கள் ஒரு நாளைக்கு 1.25 டாலருக்கும் (சுமார் 110 ரூபாய்) குறைவாகவே வாழ்கின்றனர்.
Readmore: கிட்னி முறைகேடு… ஏன் இன்னும் விசாரணையை தொடங்கவில்லை …? இபிஎஸ் கேள்வி…!