களைகட்டிய உலகக்கோப்பை கால்பந்து திருவிழா..!! இன்று மோதும் அணிகள் எவை..?

களைகட்டியுள்ள கத்தார் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவில் லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று 4 போட்டிகள் நடைபெற உள்ளன.


தங்கள் நாட்டு அணியை உற்சாகப்படுத்த கத்தாரில் குவிந்துள்ள கால்பந்து ரசிகர்களின் மத்தியில் அனல் பறக்கும் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் C பிரிவில் இடம் பெற்றுள்ள பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை எதிர்த்து சவுதி அரேபியா அணி விளையாடுகிறது.

களைகட்டிய உலகக்கோப்பை கால்பந்து திருவிழா..!! இன்று மோதும் அணிகள் எவை..?

இதைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இரண்டாவது போட்டியில் D பிரிவில் இடம் பெற்றுள்ள டென்மார்க், துனிசியாவை எதிர்த்து களம் காண்கிறது. இதையடுத்து இரவு 9.30 மணிக்கு தொடங்கும் மூன்றாவது போட்டியில் C பிரிவில் இடம் பெற்றுள்ள மெக்சிகோ போலந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இன்றைய கடைசி போட்டியில் பலம் வாய்ந்த பிரான்ஸ் அணியை அனுபவ ஆஸ்திரேலியா அணி எதிர்கொள்கிறது. இன்று நடைபெற உள்ள 4 போட்டிகளிலும் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது.

CHELLA

Next Post

#பெரம்பலூர் :பாம்பை கடித்து கொன்று தன்னை வளர்த்த வீட்டின் நபர்களை காப்பாற்றிய பூனை..!

Tue Nov 22 , 2022
பெரம்பலூர் மாவட்ட பகுதியில் அரணாரை தெருவில் சிவக்குமார் , என்கிற விவசாயி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் வீட்டில் பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். நேற்றைய தினத்தில் விடுமுறையாக இருந்ததால் குடும்பத்தினருடன் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டுள்ளார்.  இந்த நிலையில், காலை நேரத்தில் வீட்டிற்குள் பாம்பு ஒன்று உள்நுழைய முற்பட்டிருக்கிறது. அந்த பாம்பினை கண்ட வளர்ப்பு பூனை திடீரென உள்நுழைய முயன்ற அந்த பாம்புடன் நீண்ட நேரம் சண்டை […]
green eyed cat

You May Like