சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல வேடிக்கை வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது.. ஒரு கணவன் மனைவி நடு ரோட்டில் சண்டையிட்டுக் கொண்ட இணையத்தில் வைரலாகி வருகிறது.. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.. வளையல் கடைக்கு வெளியே அமர்ந்திருந்த தனது கணவரை எட்டி, உதைத்து, சரமாரியாக தாக்குவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
இதனால் நெரிசலான சந்தையை மல்யுத்தப் போட்டி இடமாக மாறியது.. அந்த வழியாக சென்றவர்கள் சண்டையை நிறுத்துவதற்குப் பதிலாக தங்கள் மொபைல் போன்களில் இந்த சண்டையைப் பதிவுசெய்து கைதட்டுவதில் மும்முரமாக இருந்தனர்.. இந்த சண்டைக்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை; இருப்பினும், அந்தப் பெண் செய்த செயல் இணையத்தில் கவனம் ஈர்த்தது..
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், பலரும் இதுகுறித்து தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.. சிலர் இது ஸ்கிரிப்டட் வீடியோ என்றும், சிலர் உண்மையான வீடியோ என்றும் பதிவிட்டு வருகின்றனர்.. இந்த பெண்ணுக்கு நிச்சயம் தற்காப்புக் கலை தெரிந்திருக்கும் என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்..
Read More : Flash : நாளை நாகையில் சுற்றுப்பயணம் செய்யும் விஜய்..! காவல்துறையினர் விதித்த 20 நிபந்தனைகள்!