வடக்கு மெக்சிகோவில் நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவொர்ம் ஈ”(“New World screwworm fly”) எனப்படும் சதை உண்ணும் ஒட்டுண்ணி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்காவில் மீண்டும் தெற்கு எல்லையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், தற்காலிக இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்காலிகமாக விலங்குகள் இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது விலங்குகளின் உயிருக்கு ஆபத்தான தொற்றை தடுப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒட்டுண்ணி அதன் லார்வாக்களுக்கு(புழு) பெயர் பெற்றது, அவை உயிருள்ள சதை மற்றும் விலங்குகளின் திரவங்களை சாப்பிட்டு, கடுமையாக தீங்கு விளைவிக்கின்றன. இதனால் விலங்குகளுக்கு கடுமையான காயங்கள், தொற்றுகள், மற்றும் உயிரிழப்பும் ஏற்படக்கூடும். இந்தப் புழு தாக்கம் மிக விரைவாக பரவக்கூடியதும், மாடுகள், செல்லப்பிராணிகள், காட்டு உயிரினங்கள் உள்ளிட்ட பல வகை விலங்குகளை பாதிக்கக்கூடியதும் ஆகும்.
நியூ வேர்ல்ட் ஸ்க்ரூவொர்ம் ஈ (New World Screwworm Fly) எனப்படும் இந்த ஆபத்தான ஈ,
மாடுகள், குதிரைகள், பைசன் போன்ற விலங்குகளின் காயப்படிந்த இடங்களில் அதன் முட்டைகளை இடுகிறது. அந்த முட்டைகள் குஞ்சு பொரித்த பிறகு புழுக்களாக (larvae) உருவாகி, விலங்குகளின் உயிருள்ள சதை மீது காயம் இருந்தால் அதனுள் நுழைந்து, அந்த சதை மற்றும் உடல் திரவங்களைச் சாப்பிட்டு வளர்கின்றன. இது கடுமையான காயங்கள் அல்லது மரணத்திற்கு வழிவகுக்கும்.
இந்த ஒட்டுண்ணி ஒரு காலத்தில் அமெரிக்காவில் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது, மாடுகள் மற்றும் பிற விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால், விலங்கு வளர்ப்புத் துறையில் கோடிக்கணக்கில் இழப்புகள் ஏற்பட்டன. ஆனால், 1970களில், இவைகளின் இனப்பெருக்கத்தை தடுக்க, மலட்டுத்தன்மையுள்ள ஆண் ஈக்களை பெருமளவில் வெளியேற்றப்பட்டன. இதனால் பெண் ஈக்கள் இனப்பெருக்கம் செய்ய முடியாமல், முட்டை இட முடியாத நிலை உருவாக்கப்பட்டது. இனம் பெருக முடியாததால், இந்த ஒட்டுண்ணி பெரும்பாலும் அழிக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக பனாமாவில் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு தெற்கு மெக்சிகோவில் இந்த ஈ கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர். மெக்சிகோ நகரத்தின் வடகிழக்கில் சுமார் 185 மைல் தொலைவில் இருந்து இப்போது புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன, இது கடந்த காலத்தை விட 160 மைல் தொலைவில் உள்ளது.
அமெரிக்க வேளாண் துறையின் செயலாளர் ப்ரூக் ராலின்ஸ் (Brooke Rollins) தெரிவித்ததாவது, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவில் உள்ள USDA ஊழியர்களின் தீவிர கண்காணிப்பு முயற்சிகள் காரணமாக,
இந்த உயிருக்கு ஆபத்தான பூச்சியின் பரவலை எதிர்கொள்ள விரைவான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க முடிந்துள்ளது.””இந்த ஈ வகை அமெரிக்க கால்நடைகளை அடைவதைத் தடுப்பதில் அமெரிக்கா விழிப்புடன் இருப்பதாக உறுதியளித்துள்ளது” என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில் மெக்ஸிகோவின் அதிபர் க்ளோடியா ஷெயின்பாம் (Claudia Sheinbaum),
அமெரிக்கா தனது தெற்குப் எல்லையை மூடிய முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் இதை “அதீதமான நடவடிக்கை எனக் கூறியதோடு, “தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, மெக்ஸிகோ அரசு அனைத்து நடைமுறைகளையும் கடைப்பிடித்து வருகிறது” என்றும் தெரிவித்தார். மேலும், ஜூன் 24ஆம் தேதிக்கு பிறகு, மெக்ஸிகோவில் பாதிக்கப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை சுமார் 19% குறைந்துள்ளது என்றும்,
தங்கள் முயற்சிகள் பாரிய முன்னேற்றத்தைக் காட்டுகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார்.