தனது தாயார் ஹீராபென்னை அவதூறாக பேசிய எதிர்க்கட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கடுமையாகக் கண்டித்தார். பிரதமர் மோடி உரையின் போது, பீகார் பாஜக தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத்ஹார்.. அவரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை தூண்டி உள்ளது..
பிரதமர் மோடி என்ன சொன்னார்?
பீகாரில் உள்ள மகா கூட்டணியை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார். எதிர்க்கட்சித் தலைவர்கள் இப்போது தனது தாயாரைத் திட்டுவதில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் குற்றம் சாட்டினார். இந்தக் கருத்துக்கள் தனது குடும்பத்தை அவமதிப்பது மட்டுமல்ல, நாட்டில் உள்ள ஒவ்வொரு தாய் மற்றும் சகோதரியையும் அவமதிப்பதாகும் என்று மோடி கூறினார்.
மேலும் “ அம்மா நம் உலகம். அம்மா நம் சுயமரியாதை. இந்த பாரம்பரியம் நிறைந்த பீகாரில் சில நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது என்று நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. பீகாரில் ஆர்ஜேடி-காங்கிரஸ் மேடையில் இருந்து என் அம்மா துன்புறுத்தப்பட்டார்… இந்த அவமானங்கள் என் அம்மாவுக்கு ஒரு அவமானம் மட்டுமல்ல. இவை நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு அவமானம். எனக்குத் தெரியும்… பீகாரின் ஒவ்வொரு தாயும், இதைப் பார்த்ததும் கேட்டதும் எவ்வளவு மோசமாக உணர்ந்தீர்கள்! என் இதயத்தில் எனக்கு எவ்வளவு வலி இருக்கிறதோ, அதே அளவுக்கு பீகார் மக்களும் அதே வலியில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்,” என்று பிரதமர் கூறினார்.
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென்ன டிசம்பர் 30, 2022 அன்று காலமானார்.
திலீப் ஜெய்ஸ்வாலின் எதிர்வினை
பிரதமர் மோடி பேசும்போது, திலீப் கண்ணீர் விட்டு அழுதார்.. அவர் கண்ணீரைத் துடைத்து காட்சி இணையத்தில் வேகமாக பரவுகிறது. இதுகுறித்து பேசிய அவர் “இந்திய கூட்டணி மேடையில் பிரதமர் மோடி அவமானப்படுத்தப்பட்ட விதம் பீகார் நிலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நடத்தைக்காக முழு தேசமும் வெட்கப்படுகிறது. ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் அந்த மேடையில் பயன்படுத்தப்பட்ட மொழி வருத்தமளிக்கிறது.. இது அவமானகரமானது.” என்று தெரிவித்தார்..
டிராமா என்று நெட்டிசன்கள் விமர்சனம்
எனினும் பிரதமர் பேசிய போது ஜெய்ஸ்வால் நடித்ததாக நெட்டிசன்கள் கடுமையா விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து பதிவிட்டுள்ள பயனர் ஒருவர் “ இவர்கள் என்ன அருமையாக நாடகம் நடத்துகின்றனர்..” என்று பதிவிட்டுள்ளார்..
மற்றொரு பயனர் இவரின் நடிப்பு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்..: என்று பதிவிட்டுள்ளார்..


Read More : இதில் முதலீடு செய்தால் ரூ.40 லட்சம் சேமிக்கலாம்.. அசத்தல் சேமிப்பு திட்டம்!