திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் எவை? வேட்பாளர்களும் ரெடி.. வெளியானது பட்டியல்..!

dmdk dmk 1

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப்போட்டி நிலவுகிறது..


இதில் ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்க வேண்டும் என்ற முனைப்பில் தீவிர தேர்தல் பணியாற்றி வருகிறது.. திமுக கூட்டணி ஏற்கனவே வலுவாக இருந்த நிலையில், மேலும் கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது.. அந்த வகையில் நேற்று திடீர் திருப்பமாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது..

தனது 20 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் திமுக உடன் தேமுதிக கூட்டணி அமைப்பது இதுவே முதன்முறை..  தேமுதிகவுக்கு 7 தொகுதிகளும் 1 ராஜ்ய சபா சீட்டும் வழங்க திமுக உறுதியளித்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும் தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள 20 தொகுதிகளை பட்டியலிட்டு தேமுதிக திமுக தலைமையிடம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அதில் இருந்து 7 தொகுதிகளை வழங்க திமுக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது..

அதன்படி, கும்மிடிப்பூண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், கேவி.குப்பம் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, விருத்தாச்சலம், கடலூர், நெய்வேலி, சேலம் தெற்கு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், சாத்தூர், விருதுநகர், சிவகாசி ஆகிய 20 தொகுதிகள் அடங்கிய பட்டியலை தேமுதிக கொடுத்துள்ளதாம்..

அதே போல் வேட்பாளர்களும் தயாராகவே வைத்திருப்பதாக கூறப்படுகிறது. விருத்தாச்சலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்தும், சிவகாசி, விருதுநகர், சிவகாசி இந்த 3 தொகுதிகளில் ஒன்றில் விஜய பிரபாகரனும், விருகம்பாக்கத்தில் பார்த்தசாரதியும், விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி எல். வெங்கடேசனும், பல்லாவரத்தில் அனகை டி. முருகேசனும். சேலம் தெற்கில் அழகாபுரம் மோகன் ராஜும் களம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது..

அதே போல் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒரு ராஜ்ய சபா இடத்திற்கு, அக்கட்சியின் பொருளாளரும், பிரேமலதாவின் சகோதரருமான எல்.கே. சுதீஷ் தேர்வு செய்யப்படுவார் என்று தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

Read More : டபுள் ஜாக்பாட்..!! மீண்டும் பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.4,000..? திமுக அரசு போட்ட மெகா பிளான்..!!

RUPA

Next Post

ED புகாரில் முகாந்திரம் உள்ளது.. அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யுங்க..! உயர்நீதிமன்றம் அதிரடி..!

Fri Feb 20 , 2026
தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்யக் கூறி அமலாக்கத்துறை சார்பில் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.. இந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அதிமுக எம்.பி இன்பதுறை மற்றும் ஆதிநாராயணன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.. இந்த வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் […]
KN Nehru 2025

You May Like