இயக்குனர் பாலா செய்த காரியம்..!! ’வணங்கான்’ படத்தில் இருந்து விலகியதற்கான காரணத்தை உடைத்த கீர்த்தி ஷெட்டி..!!

பாலா இயக்கி வரும் ‘வணங்கான்’ படத்திலிருந்து விலகியது குறித்து நடிகை கீர்த்தி ஷெட்டி மௌனம் கலைத்துள்ளார்.


இயக்குநர் பாலா, சூர்யா நடிப்பில் ‘வணங்கான்’ திரைப்படத்தை கடந்த ஆண்டு தொடங்கினார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், திடீரென இந்தப் படத்தில் இருந்து சூர்யா விலகுவதாக அறிவித்தார். இதுபற்றி பாலா வெளியிட்ட அறிக்கையில், ‘வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது’ என்று கூறியிருந்தார்.

தற்போது இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு முதலில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், அவரும் விலகவே தற்போது அவருக்கு பதில் ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்திலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து இதுவரை கீர்த்தி ஷெட்டி வாய் திறக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், ‘கஸ்டடி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கீர்த்தி ஷெட்டி, இதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது, ‘வணங்கான்’ படத்தின் தயாரிப்புப் பணிகள் நீண்டுகொண்டே சென்றதால் படத்தில் இருந்து விலக முடிவெடுத்ததாக அவர் தெரிவித்தார். மேலும், பாலா – சூர்யா இருவருக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை என்றும் கீர்த்தி ஷெட்டி தெரிவித்தார்.

CHELLA

Next Post

தலைமை ஆசிரியர் கலந்தாய்வுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தடை…..! காரணம் என்ன….?

Sun May 7 , 2023
ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜோசப் அமுல்ராஜ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன் இதன் காரணமாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு நான் முழுமையான தகுதி பெற்றுள்ளேன் என்று தெரிவித்திருந்தார். இத்தகைய நிலையில், டிஇடி தேர்வில் தேர்ச்சி பெறாத நபர்களுக்கு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதற்காக மாநில அளவிலான பொது கலந்தாய்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் […]
தலைமை மருத்துவரை வீடியோ காலில் தொடர்புகொண்ட நீதிபதி..! மாணவியின் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதி..!

You May Like