புதுசா சொல்லுங்கன்னா என்ன சொல்றது? CM மாதிரி பொய்களை அடித்துவிடவா? நாமக்கல்லில் விஜய் கேள்வி..

tvk vijay speech trichy

விஜய்யின் தவெக 2026-ல் தனது முதல் தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்காக தவெக தலைவர் விஜய் கடந்த 13-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.. வார இறுதி நாட்களில் சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் பிரச்சாரம் செய்து வருகிறார்.. திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய விஜய் கடந்த வாரம் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்..


இந்த நிலையில் விஜய் இன்று நாமக்கல், கரூர் மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி சென்ற அவர், திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக் நாமக்கல்லுக்கு சென்றார்.

நாமக்கல் நகரில் கே.எஸ் திரையரங்கம் அருகே விஜய் மாபெரும் தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ அனைவருக்கும் வணக்கம்.. நிறைய தொழில்கள் செய்யும் ஊர் நாமக்கல்.. நாமக்கல் மாவட்டத்தின் முட்டை உலகம் கூட ரொம்ப பிரசித்தி பெற்றது.. தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்ச்சி ஊட்டும் ஊரும் இது தான்.. தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லட்டா.. நாடி, நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரிகளை எழுதியவர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை தான்..

தமிழ்நாட்டு மக்களுக்கு இட ஒதுக்கீட்டு உரிமையை வழங்குனதும் இதே நாமக்கல்லை சேர்ந்தவர்.. சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த சுப்புராயன் அவர்கள்.. இடஒதுக்கீட்டு உரிமையை வழங்குனதில் இவருக்கு மிகப்பெரிய பங்குள்ளது.. அவருக்கு நாமக்கல்லில் மணிமண்டபம் கட்டுவோம் என வாக்குறுதி கொடுத்தது யாரு? சொன்னாங்களே.. செஞ்சாங்களா? ஒரு படத்தில் வடிவேலு சார், எம்டி பாக்கெட்டை காட்டுவாரு.. அதே போல் இவர்கள் கொடுத்த வாக்குறுதி பற்றி கேட்டால் அப்படி தான் எம்டி பாக்கெட்டை காட்ட வேண்டியது தான்.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானிய சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டதா? போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் திட்டம் செயல்படுத்தப்படும் என இதெல்லாம் சொன்னார்களே செய்தார்களா? ஒரு நாளைக்கு 5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படும் நாமக்கல்லில் முட்டைகள் வீணாவதை தடுக்க முட்டை சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருக்கு.. ஆனால் இதுவரை ஆண்ட கட்சிகளும் சரி, ஆளும் கட்சியும் சரி அதை பற்றி யோசிக்கவே இல்லை..

திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமான ஒரு மருத்துவமனையில் நடந்த கிட்னி திருட்டு.. ஏழை எளிய விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து கிட்னி திருட்டு நடந்திருக்கு.. கிட்னி திருட்டுக்கு அடிப்படையே கந்துவட்டி கொடுமை தான்.. தவெக ஆட்சிக்கு வந்தால் இதில் தொடர்புடைய ஒவ்வொருவரும் கைது செய்யப்படுவார்கள்..

என்ன இந்த விஜய் எங்கு சென்றாலும் கேள்வியாக கேட்கிறார்.. அதற்கு கல்வி, சுகாதாரம், சாலை வசதி, பெண்கள் பாதுகாப்பு இதுபோன்ற அடிப்படை விஷயங்களில் எந்த சமரசமும் கிடையாது என்று சொன்னோம்.. இதை தான் எல்லோரும் சொல்கின்றனர்.. விஜய் புதுசா சொல்லவில்லையே என்று கூறுகின்றனர்..

ஒரு மனிதனுக்கு நல்ல உணவு, நல்ல கல்வி, நல்ல குடிநீர், மருத்துவ வசதி, சாலை வசதி பாதுகாப்பான வாழ்க்கை இது தானே அடிப்படை தேவை.. அதை சரியா செய்வோம் என்று சொல்வது தானே சரி.. எது சாத்தியமோ அதை மட்டும் தான் சொல்வோம் அதனை தான் செய்வோம்.. திமுக மாதிரி பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம்.. புதுசா புதுசா சொல்லுங்க எனக்கு புரியவில்லை.. புதுசா என்ன சொல்றது. செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும்.. காற்றில் கல்வீடு கட்டப்படும்.. அமெரிக்காவுக்கு ஒத்தையடி போடப்படும்.. வீட்டுக்குள் ஏரோபிளேன் ஓட்டப்படும்.. நம்ம சிஎம் அவர்கள் அடித்துவிடுவது போல் அடித்துவிடுவோமா?” என்று தெரிவித்தார்..

Read More : மக்களே ஜாக்கிரதை.. திமுகவுக்கு ஓட்டுப்போட்டால் அது பாஜகவுக்கு ஓட்டுப் போட்ட மாதிரி.. விஜய் பேச்சு!

RUPA

Next Post

மக்களே ஜாக்கிரதை.. திமுகவுக்கு ஓட்டுப்போட்டால் அது பாஜகவுக்கு ஓட்டுப் போட்ட மாதிரி.. விஜய் பேச்சு!

Sat Sep 27 , 2025
தவெக தலைவர் விஜய் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவர் இன்று நாமக்கல் நகரில் கே.எஸ் திரையரங்கம் அருகே தவெக தலைவர் விஜய் மாபெரும் தொண்டர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ அனைவருக்கும் வணக்கம்.. நிறைய தொழில்கள் செய்யும் ஊர் நாமக்கல்.. நாமக்கல் மாவட்டத்தின் முட்டை உலகம் கூட ரொம்ப பிரசித்தி பெற்றது.. தமிழ்நாட்டு மக்களுக்கு உணர்ச்சி ஊட்டும் ஊரும் இது தான்.. […]
tvk vijay campaign in namakkal and karur place change 1

You May Like