கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த பெண் கணவரை இழந்த நிலையில் நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். 23 வயதுடைய மூத்த மகளுக்கு வாத்தியார்விளையை சேர்ந்த ஒரு இளைஞருக்கு திருமணம் நடந்து முடிந்தது.
திருமணம் ஆனது முதல் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் அந்த பெண்ணுக்கும், சென்னையை சேர்ந்த ஒரு இளைஞனுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறபடுகிறது. இதனை இளம் பெண்ணின் தாயார் மற்றும் குடும்பத்தினர் கண்டித்தனர்.
இந்தநிலையில் தனது காதலனை பார்க்க அந்த பெண் கடந்த 8-ந் தேதி சென்னை சென்றுள்ளார். மறுநாள் தனது தங்கைக்கு போன் செய்து தன்னை காப்பாற்ற வேண்டும் என கூறி கதறி அழுதுள்ளார். அதன்பின்பு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அந்த இளம்பெண்ணுக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டுள்ளதாக நினைத்து தாயார் நேசமணி போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் செல்போனில் காப்பாற்ற வேண்டும் என பேசியிருப்பதால் அவரை மர்மநபர்கள் கடத்தினார்களா? அல்லது அவருக்கு வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Read more: சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்! என்ன காரணம்?