உதயநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு..? வேட்பு மனு விவரம் வெளியானது..!

udhanithi stalin 1

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.. வாக்கு எண்ணிக்கை 4-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை முடிவடைந்து தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்..


இந்த நிலையில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.. இன்று முதல் ஏப்.6 வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.. எனினும் இந்த 8 நாட்களில் 4 நாட்களே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும்.

மார்ச் 30, ஏப்ரல், 2,4, 6 ஆகிய தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம். மீதமுள்ள 4 நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் அன்றைய தினங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. அதாவது மார்ச் 31, ஏப்ரல் 1. 3, 5 ஆகிய நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது.. ஏப்ரல் 7 ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யபடும். வேட்புமனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 9 ம் தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.. இந்த நிலையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.. அதன்படி துணை முதல்வர் உதயநிதிக்கு ரூ.12.92 கோடி அசையும் சொத்து இருப்பதாகவும், அசையா சொத்து ரூ.7.72 கோடி உள்ளதாகவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதி மனைவி கிருத்திகாவுக்கு அசையும் சொத்து ரூ.13.25 கோடி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. கிருத்திகா பெயரில் ரூ.1.87 கோடி மதிப்பிலான தங்க நகைகள் உள்ளது. உதயநிதியிடம் கையிருப்பாக ரூ.50,000 பணம் இருப்பதாகவும் கிருத்திகாவிடம் ரூ.75,000 பண இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயநிதிக்கு தங்க நகைகள் ஏதுமில்லை, திருவள்ளூர் அருகே உளுந்தையில் 10.5 ஏக்கர் வேளாண் நிலம் உள்ளது, வேளச்சேரியில் 2400 சதுர அடி நிலம், ராயப்பேட்டையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.. உதயநிதியிடம் ரூ.1 கோடிமதிப்பிலான ட்ஃபெண்டர் கார், இன்னோவா கார் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : திமுக, பாஜகவை நம்பாதீங்க.. 100 சதவீதம் இந்த விஜய்யை நீங்கள் நம்பலாம்.. திருச்சியில் விஜய் பிரச்சாரம்..!

RUPA

Next Post

Gold In Dream: கனவில் மீண்டும் மீண்டும் தங்கத்தைக் கண்டால் என்ன பலன் தெரியுமா..?

Thu Apr 2 , 2026
Gold In Dream: Do you know what the meaning of seeing gold in your dream is?
gold in dream

You May Like