அஞ்சலகத்தில் என்னென்ன சேமிப்பு திட்டங்கள் உள்ளன?

தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள் (NSC) : தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டமானது 5 வருட முதிர்வு காலத்துடன் வருகிறது, தற்போது ஆண்டுக்கு 7 சதவீத வட்டி விகிதத்தை அரையாண்டுக்கு ஒருமுறை கூட்டி வழங்குகிறது, மேலும் இந்த தொகையானது முதிர்வு காலத்தின் போது செலுத்தப்படும். முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு இல்லாததால், குறைந்தபட்ச முதலீடு ரூ.1000 ஆக உள்ளது.


சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) : இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கான ஒரு சேமிப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது. திட்டத்தின்படி 10 வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாப்பாளரோ குறைந்தபட்சமான தொகையாக ரூபாய் 1000 செலுத்தி அஞ்சலகங்களில் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்கலாம். பெண் குழந்தைகளின் பெற்றோரை ஊக்குவிக்கவும், சுகன்யா சம்ரித்தி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.6 சதவீதமாக உள்ளது. இந்தத் திட்டக் கணக்கை ஒரு பெண் குழந்தையின் பெயரில் மட்டுமே தொடங்க முடியும். பிறந்த பிறகு 10 வயது வரை இந்த திட்டத்தின் கீழ் கணக்கைத் திறக்கலாம்.30 வயதின் போது முதிர்ச்சி தொகையை பெறலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு (PPF) : பொது வருங்கால வைப்பு நிதி சேமிப்பு திட்டமானது மிக பிரபலமான அஞ்சலக திட்டங்களில் ஒன்றாகும். தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்திற்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பான, சந்தை அபாயம் இல்லாத நம்பிக்கையான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் எவரும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை டெபாசிட் செய்யலாம். தற்போது, இதில் ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. மேலும், இது ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது. இத்திட்டத்திற்கான வைப்புத்தொகையை மொத்தமாக அல்லது 12 தவணைகளில் கட்டலாம் மற்றும் இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) : மூத்த குடிமக்களை இலக்காகக் கொண்ட திட்டங்கள், ஐந்து வருட முதிர்வு காலத்துடன் வருகின்றன. அதிகபட்சம் ரூ.15 லட்சத்திற்கு மிகாமலும், குறைந்தபட்சம் ரூ.1000-க்கு மேலும் இத்திட்டத்தில் சேமிப்பை தொடங்கலாம். தற்போது, இதில் 8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகின்றனர். மேலும், 60 வயதுடைய தனிநபர் இத்திட்டத்தை பெறலாம். எவ்வாறாயினும், 55 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட ஒரு நபர், ஓய்வு பெற்ற அல்லது தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், உங்கள் ஓய்வூதியப் பலன்களைப் பெற்ற ஒரு மாதத்திற்குள் கணக்கைத் தொடங்கலாம்.

மாதாந்திர வருமானத் திட்டம் (MIP): மாதாந்திர முதலீட்டுத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி வழங்குப்படுகிறது. இதற்கு ரூ.1,500 மடங்குகளில் முதலீடு தேவை. அதிகபட்ச முதலீட்டு வரம்பு என்பது ஒரு அக்கவுண்டிற்கு ரூ 4.5 லட்சம் மற்றும் கூட்டுக் கணக்கில் ரூ 9 லட்சம் என வகைப்படுத்தி உள்ளனர். அனைத்து அக்கவுண்டுளிலும் இருப்பைச் சேர்ப்பதன் மூலம் அதிகபட்ச முதலீட்டு வரம்பிற்கு உட்பட்டு எந்த தபால் அலுவலகத்திலும் எத்தனை திட்டக் கணக்குகளை வேண்டுமானாலும் நீங்கள் திறக்கலாம்

KOKILA

Next Post

காவல்துறையினர் சுற்றி வளைத்த போது தப்பிக்க முயற்சி செய்த பாலியல் குற்றவாளிகள்…! காவல்துறையினர் அதிரடி துப்பாக்கிச் சூடு….!

Sun Jan 15 , 2023
தமிழகத்தில் சமீபகாலமாகவே கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். பொதுவாக திமுக ஆட்சிக்கு வந்து விட்டாலே தமிழக மக்களிடையே ஒருவித பீதி ஏற்பட்டுவிடும். அதாவது, திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. இனி திருடர்கள் சுதந்திரமாக நடமாடுவார்கள் என்ற பயத்தில் பொதுமக்கள் எப்போதும் எச்சரிக்கையாகவே இருப்பார்கள். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரு இளம் பெண்ணை கத்தி முனையில் கடத்திச் சென்று 2 பேர் கூட்டு பலாதாரம் […]
தனிப்பட்ட வாகனங்களில் இந்த ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது..! தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..!

You May Like