பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு வருமான வரித்துறை உத்தரவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இணைக்காதவர்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க வருமான வரித்துறை பான் எண்ணை வழங்குகிறது. ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் எண்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவே, பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும் செயல்முறை செயல்படுத்தப்படுகிறது. இப்போது, ஆதாருடன் இணைக்கப்படாத பான் எண் செயலிழந்ததாகக் கருதப்படுகிறது. அதாவது, அது ஒரு செயலற்ற பான் எண். இந்த பான் எண் பயன்பாட்டில் இல்லை. அதாவது, எந்த ஒரு நோக்கத்திற்கும் இது செல்லுபடியாகாது.
புதிய வங்கிக் கணக்கைத் திறக்க முடியாது.
டிமேட் கணக்கைத் திறக்க முடியாது.
பெரிய நிதி பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது.
கடன் பெற முடியாது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.
ரீஃபண்ட் கிடைக்காது.
டிடிஎஸ் இரண்டு மடங்கு அதிகமாகப் பிடிக்கப்படும்.
பான்-ஆதாரை இன்னும் இணைக்க முடியுமா?
பான் எண்ணை இன்னும் ஆதாருடன் இணைக்க முடியும். தாமதக் கட்டணம் செலுத்தி இணைக்க முடியும். வெற்றிகரமாக இணைத்த பிறகு, பான் எண் மீண்டும் செயல்படுத்தப்படும். இரண்டும் இணைக்கப்படாவிட்டால், அது செயலிழக்கச் செய்யப்படும். இருப்பினும், பான் எண் செயல்படுத்தப்படும் வரை அது செயல்படாத நிலையிலேயே இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பான் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை எப்படிச் சரிபார்ப்பது?
வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் செல்லவும்.
முதன்மைப் பக்கத்தில் உள்ள ‘Quick Links பிரிவில் ‘Link Aadhaar Status என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பான்-ஆதார் எண்ணை உள்ளிடவும்.
‘View Link Aadhaar Status என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்போது உங்கள் பான் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை நீங்கள் சரிபார்க்கலாம்.
எஸ்எம்எஸ் மூலம் கண்டறியுங்கள்..
எஸ்எம்எஸ் மூலமாகவும் இந்த நிலையை எளிதாகச் சரிபார்க்கலாம். உங்கள் மொபைல் எண்ணிலிருந்து UIDPAN <ஆதார் எண்> <பான் எண்> என டைப் செய்து, இந்த செய்தியை 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
Read More : சத்தீஸ்கர் : 2 என்கவுண்டர்களில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை..! பாதுகாப்பு படை அதிரடி..!



