கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மீனவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இவரின் மனைவி வீட்டில் இருந்த ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு வங்கியில் அடகு வைத்த நகையை மீட்க செல்வதாக மாமியாரிடம் கூறி விட்டு சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவே இல்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் வேலை பார்த்து வந்த கும்பகோணம் பகுதியை சேர்ந்த 28 வயது இளைஞருடன், மீனவரின் மனைவிக்கு தகாத உறவு இருந்துள்ளது. வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அந்த பெண் தனது கள்ளக்காதலுடன் ஓடியது விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் மீனவரின் மனைவியை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அங்கு கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் அவர் விடாப்பிடியாக பிடிவாதமாக இருந்தார். பின்னர் குழந்தைகளை பார்த்து மனம் மாறிய மீனவர் மனைவி, கணவருடன் செல்ல சம்மதம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி கணவருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Read more: Breaking : தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்..!



