தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை எப்போது..? தலைமை ஹாஜி வெளியிட்ட அறிவிப்பு..!!

நேற்று பிறை தென்படாததால் தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை இன்று இல்லை எனவும், நாளை (ஏப்ரல் 11) கொண்டாடப்படும் என்றும் தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பண்டிகை இஸ்லாமியர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பார்கள். நோன்பு காலத்தில் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் இருப்பார்கள்.

ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரமலான் மாதம் தொடங்கும். அந்த வகையில், இந்தாண்டு தமிழ்நாட்டில் பிறை பார்க்கப்பட்டு ரம்ஜான் மாதம் தொடங்கியது. இந்நிலையில், நேற்று ஏப்ரல் 9ஆம் தேதி பிறை தென்படாததால் இன்று ரமலான் கொண்டாடப்படாது. நாளை (ஏப்ரல் 11) தான் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு சார்பில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள் அரசு அலுவலகங்கள் வங்கிகள் இயங்காது.

Read More : ”பிரதமர் மோடி இதை மட்டும் செய்துவிட்டால் விலகி விடுகிறோம்”..!! சீமான் சவால்..!!

Chella

Next Post

விலங்குகளிடையே மாற்றத்தை ஏற்படுத்திய அபூர்வ சூரிய கிரகணம்!

Wed Apr 10 , 2024
Solar eclipse: ஒளி மங்கத் தொடங்கும் போது தாவரங்களும் விலங்குகளும் முழுமையடையத் தொடங்கும் என்று சான் அன்டோனியோவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் வானியல் பேராசிரியரான ஏஞ்சலா ஸ்பெக் கூறினார். இது சுமார் 75%, 80% கிரகணம் அடைந்தவுடன், விலங்குகள் செயல்படத் தொடங்கும் அவர் கூறினார். சூரிய கிரணகத்தின்போது, விலங்குகளிடையே ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து தெற்கு கரோலினாவில் உள்ள ரிவர்பேங்க்ஸ் மிருகக்காட்சிசாலையில் பணிபுரியும் விஞ்ஞானி ஆடம் ஹார்ட்ஸ்டோன்-ரோஸ் கூறுகையில்,”ஆரம்பத்தில் […]

You May Like