ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி திதி எப்போது? அந்த நாளில் மேற்கொள்ள வேண்டிய பைரவ விரத வழிபாட்டு முறை, அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
ஆடி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று விரதம் இருந்து பைரவரை வழிபட ஒரு சிறந்த நாளாகும். பைரவர் சிவபெருமானின் உக்கிரமான அம்சங்களில் ஒருவராவார். எனவே அஷ்டமி நாளில் கால பைரவரை இணைத்து வழிபடுவதால் பலவிதமான இன்னல்கள் மற்றும் கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
சந்திரனின் வளர்பிறை தேய்பிறை, அதாவது அமாவாசை பௌர்ணமிக்கு பிறகு வரும் திதிகள் தான் வளர்பிறை தேய்பிறை திதியாக கருதப்படுகிறது. அம்மாவாசை பௌர்ணமிக்கு பிறகு வரும் எட்டாவது மாதம் அஷ்டமி ஆகும். அதாவது, ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமிக்கு பிறகு தேய்பிறை நாட்களில் வரும் எட்டாவது நாள் தான் தேய்பிறை அஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. எனவே, இந்த 2025 ஆம் ஆண்டில் ஆடி தேய்பிறை அஷ்டமி எப்போது வருகிறது, அஷ்டமி திதிக்கான நேரம் மற்றும் அந்த நாளில் மேற்கொள்ள வேண்டிய பைரவ விரத வழிபாட்டு முறை, அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி தேதி: இந்த 2025 ஆம் ஆண்டு ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமியானது ஆகஸ்ட் 16ம் தேதி சனிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி என்பதால், அந்நாளில் விரதம் இருந்து பைரவரை வழிபடுங்கள். மேலும் அருகில் இருக்கும் பைரவர் கோயில் அல்லது சிவன் கோயிலுக்கு சென்று பைரவருக்கு சிவப்பு நிற மலர்களை சமர்ப்பியுங்கள். நைவேத்தியமாக செவ்வாழை கொடுங்கள். மேலும், தேங்காயை இரண்டாக உடைத்து அதில் நெய் அல்லது விளக்கினை ஊற்றி, அதில் திரி போட்டு தீபம் ஏற்றி பைரவருக்கு உரிய மந்திரங்களை சொல்லி பைரவரை வழிபடுங்கள்.இந்நாள் முழுவதும் இறைவழிப்பாட்டில் ஈடுபடுங்கள். சுப காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது.
நன்மைகள்: ஆடி தேய்பிறை அஷ்டமி நாளில் விரதம் இருந்து பைரவரை வழிபட்டால் தீராத பண கஷ்டங்களும் தீரும், தொழில் வியாபாரங்களில் எதிரிகள் தொல்லை ஒழியும், நிதி வருமானம் பெருகும், துரதிஷ்ட சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். ஏவல், செய்வினை போன்றவை பழிக்காமல் போகும், கொடிய நோய்கள் குணமாகும்.
ஆடி தேய்பிறை அஷ்டமி அன்று கால பைரவருக்கு விளக்கேற்றி வழிபட்டால் நாள் பட்ட நோய்கள் மற்றும் கடன் பிரச்சினைகள் போன்றவை தீரும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி ஜாதகத்தில் சனி தோஷம் இருப்பவர்கள் பைரவருக்கு விளக்கேற்றி வழிபட்டால் தோஷம் நீங்கும்.
Readmore: நோட்…! இனி காலை 6 முதல் பிற்பகல் 1 மணி வரை… சென்னையில் மாற்றம்…! தவறி கூட போகாதீங்க…