கடந்த திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கொண்டுவரப்பட்டது.. குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் மூலம் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அப்போதைய முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.. அதே போல் தவெக தலைவர் விஜய்யும் தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்..
அந்த வகையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்துள்ளது.. திமுகவால் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.. மேலும் “ பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய அவகாசம் தேவைபடுகிறது.” என்று தெரிவித்தார்.. ஆனால் மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா? முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்..
இதை தொடர்ந்து மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமை தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் மே 15-ம் தேதி பெண்கள் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.. எனினும் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி மாதம் ரூ.2500 பணம் எப்போது கிடைக்கும் என்று பெண்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் மகளிருக்கு ரூ.2500 வழங்கும் திட்டம் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ ரூ.2500 உரிமை தொகை குறித்து பட்ஜெட்டில் அறிவிக்கப்படும். மதுரை மாநகராட்சி ஊழல் குறித்த ஆதாரங்கள் சேகரிக்கப்படுகிறது..
திமுக ஆட்சியில் ரூ.1000 மகளிர் உரிமை தொகை வட மாநிலத்தவருக்கும் வழங்கி உள்ளனர்.. திமுக ஆட்சியில் விவசாய கடன் தள்ளூபடி விவகாரத்தில் ஆர்பிஐ கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.. ஆனால் இந்த முறை விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்துள்ளது.. எனவே ஆர்பிஐ அறிவுறுத்தலின் படி விவசாய கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..
ஆனால் விவசாயக் கடன்களை வரம்பு இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய பரிசீலனை செய்து வருகிறோம்.. முதல்வர் விஜய்யின் அறிவுறுத்தலின் படி, மாநில நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.. இன்னும் 2 வாரங்களில் இந்த வெள்ளை அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.. அதைனை தொடர்ந்து திருத்திய பட்ஜெட்டும் விரைவில் தாக்கல் செய்யப்படும்..” என்று தெரிவித்தார்..
Read More : திருப்பரங்குன்றம் கோயிலில் 87 பேர் மயக்கமா..? கோயில் நிர்வாகம் பரபரப்பு விளக்கம்..!



