நடப்பு கல்வியாண்டுக்கான (2025 – 26) பொதுத் தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 2026 மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து பொதுத் தேர்வு துவங்கி ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரையில் நடைபெறவுள்ளது. பள்ளிக் கல்வி துறை வெளியிட்டுள்ள நாட்காட்டியின் படி மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு, காலாண்டு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் நடைபெறும். செப்டம்பர் 27-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 10, 11, மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை அக்டோபர் 2025 ல் வெளியிடப்படும். ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் 18-ம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கி செப்டம்பர் 26-ம் தேதியுடன் நிறைவடையும். இதனைத் தொடர்ந்து காலாண்டு விடுமுறையும் விடப்படும். அதே போல் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி முடிவடையும். மேலும் தேர்வுக்கு முன் உள்ள அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.