நோட்..! 29-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின்தடை…! முழு விவரம்

electricity EB 2025

சென்னையில் மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 29-ம் தேதி காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கே.கே.நகர் கோட்டத்தில் வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய பகுதிகள், தாம்பரம் கோட்டத்தில் செம்பாக்கம், சேலையூர், ராஜகீழ்பாக்கம், கவுரிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.


தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் வருகிற 29.7.2025, செவ்வாய்க்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். செயலக காலனி, கேம்ப் ரோடு, செம்பாக்கம், அகரம் பிரதான சாலை, சேலையூர், விஜிபி சீனிவாசநகர், விஜிபி சரவணாநகர், காயத்ரிநகர், கிருஷ்ணா நகர், திருவாஞ்சேரி, நூத்தேஞ்சேரி, கணபதி நகர், ஞானா நகர், பாரதிதாசன் நகர், சக்திநகர், காயத்திரி கார்டன், ராஜகீழ்பாக்கம், கௌரிவாக்கம் ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

மேலும் சந்தோஷபுரம், ராக்கி கார்டன், ராஜாஜி கார்டன் நகர், சுந்தரம் காலனி, பராசக்தி நகர், சத்யசாய்நகர், கோகுல் நகர், ஷா அவென்யூ, காமராஜ் நகர், ஜெயேந்திர நகர், தரகேஸ்வரி நகர், கே.வி.சி.நகர், வேளச்சேரி பிரதான சாலை, பழனியப்பா நகர், சாந்தம்மாள் நகர், விக்னராஜபுரம், விஜயநகரம், கே.கே.சாலை, சிவகாமி நகர், பத்மாவதி நகர்,அலமேலுபுரம், கண்ணன்நகர், இந்திரா நகர், சோழன் நகர், சுதர்ஷன் நகர், டியானா ஸ்கை சிட்டி, திருமால் நகர், அன்னை சத்யா நகர், கணேஷ் நகர், மாருதி நகர், ஸ்ரீ தேவி நகர் ஆகிய இடங்களில் வருகிற 29-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

Vignesh

Next Post

காசாவில் தினமும் 10 மணி நேரம் போர்நிறுத்தம் அறிவிப்பு!. பசியில் வாடும் மக்களுக்கு இறக்கம் காட்டிய இஸ்ரேல்!.

Mon Jul 28 , 2025
இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையேயான போர் கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலால், காசாவில் பஞ்ச சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அதிகரித்து வரும் பசி பிரச்சனையை சமாளிக்க, இஸ்ரேல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காசாவின் மூன்று பகுதிகளில் தினமும் 10 மணி நேரம் போர் நிறுத்தம் செய்வதாகவும், அங்குள்ள ஏழைகள் மற்றும் பட்டினியால் வாடும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை […]
10 hour daily ceasefire gaza 11zon

You May Like