Rain: இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு…? வானிலை மையம் எச்சரிக்கை…!

rain 1

தமிழகத்தில் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 21-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 22 முதல் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் செப்.22-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

'புதின் என்னை ஏமாற்றிவிட்டார்'!. உக்ரைனுடனான போரை தீர்ப்பது 'எளிதானது' என்று தான் நினைத்தேன்!. டிரம்ப் குற்றச்சாட்டு!

Fri Sep 19 , 2025
உக்ரைனுடனான மோதலை தீர்ப்பது எளிதாக இருக்கும் என்று தான் நினைத்ததாகவும் ஆனால் ரஷ்ய அதிபர் புதின் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். லண்டனில் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பில்போது டிரம்ப் பேசியதாவது, “நான் மிகவும் எளிதாக நினைத்தது அதிபர் விளாடிமிர் புதினுடனான எனது உறவின் காரணமாக இருக்கலாம். அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அவர் என்னை உண்மையிலேயே ஏமாற்றிவிட்டார்,” என்று டிரம்ப் கூறினார். “இது ரஷ்யா […]
putin trump

You May Like