இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் சுலபமாகக் கிடைக்கும் பல உணவுகளை நம்மால் தவிர்க்க முடியாமல் போகிறது. ஆனால், இந்த வசதிகளுக்குப் பின்னால் ஆபத்தும் மறைந்திருக்கிறது. குறிப்பாக புற்றுநோயின் அபாயம் உள்ளது. மருத்துவ மற்றும் சுகாதார ஆய்வுகளின் அடிப்படையில், புற்றுநோய் அபாயத்தை தூண்டும் சில முக்கியமான உணவுகளை இந்தப் பதிவில் பார்ப்போம்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் : போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், உலக சுகாதார அமைப்பினால் ‘குரூப் 1 புற்றுநோய் காரணிகள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் உள்ள நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரோசாமைன்கள் குடல் செல்களில் மரபணு மாற்றங்களை ஏற்படுத்தி பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன.
சர்க்கரை பானங்கள் : சோடா மற்றும் பல நிறம் கொண்ட பானங்களில் இருக்கும் அதிக அளவிலான சர்க்கரை, ரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் நிலைகளை பாதித்து வீக்கம், இரத்த அழுத்தம், மற்றும் கணைய புற்றுநோய் போன்ற நோய்களுக்குக் காரணமாகிறது. எனவே, இதற்கு மாற்றாக இளநீர், மூலிகை தேநீர் போன்றவை குடிக்கலாம்.
வறுத்த உணவுகள் : ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால், அக்ரிலாமைடு என்ற வேதி சேர்மம் உருவாகிறது. இது, புற்றுநோய்க்கு வழிவகுக்கும். NCBI வெளியிட்ட ஒரு ஆய்வில், அதிகமாக வறுத்த உணவு, குறிப்பாக புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை பெருக்குவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கிரில் இறைச்சி : உயர்ந்த வெப்பத்தில் இறைச்சியை கிரில் செய்யும்போது HCAs மற்றும் PAHs போன்ற இரசாயனங்கள் உருவாகின்றன. இந்த சேர்மங்கள் டிஎன்ஏவின் இயல்பான கட்டமைப்பை சேதப்படுத்தி புற்றுநோய் வளர்ச்சியை தூண்டும்.
மதுப்பழக்கம் : அற்ப அளவில்கூட மது அருந்துவது புற்றுநோய் அபாயத்தை தூண்டக்கூடியது என்பது மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை உயர்த்துகிறது, ஃபோலேட் உறிஞ்சுதலைத் தடுக்கும் மற்றும் டிஎன்ஏ பாதிக்கிறது. இது மார்பகம், கல்லீரல் மற்றும் குரல்வளை புற்றுநோய் உள்ளிட்ட பலவகை புற்றுநோய்களின் அபாயத்தைக் குறிக்கிறது.
பாக்கெட் உணவுகள் : இன்ஸ்டண்ட் நூடுல்ஸ், பேக் செய்யப்பட்ட சிற்றுண்டிகள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலில் முற்றிலும் தேவையற்ற செயற்கை சேர்மங்களை கொண்டுள்ளன. இவை இயற்கை ஊட்டச்சத்துக்களைத் தாண்டி, நாள்பட்ட வீக்கம் மற்றும் மரபணு சேதங்கள் வழியாக புற்றுநோய்க்கான அடித்தளங்களை அமைக்கின்றன. உணவு ஒரு மருந்தாகவும், ஒரு நஞ்சாகவும் இருக்கலாம். அதனை எப்படி தேர்வு செய்கிறோம் என்பது தான் எல்லைக்கோடு.
Read More : ஊர்விட்டு ஊர் போனாலும் கள்ளக்காதலனை விட முடியல..!! எச்சரித்தும் திருந்தல..!! கணவன் செய்த பயங்கரம்..!!