எந்த தோஷத்திற்கு எந்த கோவில் செல்ல வேண்டும்..? 108 பிரச்சனைகளுக்கு 108 சிவ தலங்கள் இதோ..

shiva temple 1

மனித வாழ்க்கை என்பது சோதனைகளால் நிரம்பியது. முன் ஜென்ம பாவம், இவ்வஜென்ம பிழைகள், கிரக தோஷங்கள், பித்ரு சாபம், குடும்ப சாபம் என ஒவ்வொரு தடையுக்கும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இத்தகைய துன்பங்களை போக்கும் உத்தம வழி, பரமசிவனை வணங்குவதே என பலரும் நம்புகிறோம். பாவங்களை போக்கும் பவனராக விளங்கும் சிவபெருமான், அனைத்து தோஷங்களுக்கும் தீர்வளிக்கக் கூடிய பரமதெய்வம்.


அதனால் உலகம் முழுவதும் பக்தர்கள், தங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் விசேஷமான சிவஸ்தலங்களை நாடி வழிபடுகின்றனர். குறிப்பாக, பாவ நிவாரணம், சந்ததிப் பேறு, திருமணத் தடைகள் நீக்கம், மனஅழுத்தம் விலகல், சாப விமோசனம் என 108 விதமான வாழ்க்கை சிக்கல்களுக்கு தீர்வு தரும் சிவாலயங்கள் இருப்பதைக் காணலாம். அந்த விஷேஷ புண்ணியத் தலங்களை பற்றிய முழுமையான பட்டியலையும், அவற்றின் பலன்களையும் பார்க்கலாம்.

  1. சந்திர தோஷம் விலக – திருமுல்லைவாயில்
  2. கல்வி மேன்மை – திருவெண்காடு
  3. பிராமண குற்றம் விலக – திருநெல்வேலி
  4. முக்தி கிடைக்க – திருக்குற்றாலம்
  5. நட்சத்திர தோஷம் விலக – மதுரை
  6. வாழ வழி தெரியாதவர்கள் – திருப்பரங்குன்றம்
  7. தீராத பாவம் விலக – திருவாடானை
  8. மனநலம் சரியாக – திருமுருகன் பூண்டி
  9. குழந்தை தோஷம் விலக – திருப்பாதிரிப்புலியூர்
  10. செய்வினை தோஷம் விலக – திருவக்கரை
  11. வாணிப பாவம் விலக – திருவேற்காடு
  12. மூன்று தலைமுறை தோஷம் விலக – மயிலாப்பூர்
  13. காமத்தால் ஏற்ற தோஷம் விலக – திருஅரசிலி
  14. வீண் வம்பு விலக – திருவாலங்காடு
  15. ஞானம் கிடைக்க – செய்யாறு
  16. பந்த பாசத்திலிருந்து விடுபட – திருப்பனங்காடு
  17. கொலை பாதக பாவம் விலக – தக்கோலம்
  18. குடும்ப கவலைகள் நீங்க – திருப்பாச்சூர்
  19. பித்ருதோஷம் விலக – திருவெண்ணைநல்லூர்
  20. நல்ல மனைவி அமைய – திருவதிகை
  21. முக்தி பெற – திருவாண்டார்
  22. பாவம் விலக – விருத்தாச்சலம்
  23. பசுவை கொன்ற பாவம் தீர – கரூர்
  24. பித்ரு தோஷம் நீங்க – கொடுமுடி
  25. முன்ஜென்ம பாவம் விலக – திருக்குடந்தை
  26. கர்மவினைகள் அகல – திருச்சி
  27. கஷ்டங்கள் விலக – திருநள்ளாறு
  28. மனநோய் விலக – திருவிடைமருதூர்
  29. ஞானம் பெற – திருவாவடுதுறை
  30. தீராத கஷ்டம் நீங்க – திருவாஞ்சியம்
  31. கல்வியில் முன்னேற்றம் உண்டாக – திருமறைக்காடு
  32. முக்தி பெற – திருத்தில்லை
  33. மரண பயம் விலக – திருநாவலூர்
  34. பல தலைமுறை சாபம் விலக – திருவாரூர்
  35. சர்ப்பதோஷம் விலக – நாகப்பட்டினம்
  36. முக்தி கிடைக்க – காஞ்சிபுரம்
  37. நினைத்த காரியம் நடக்க – திருவண்ணாமலை
  38. முன்வினை விலக – திருநெல்லிக்கா
  39. மணவாழ்க்கை சிறக்க – திருச்செங்கோடு
  40. கர்ப்ப சிதைவு தோஷம் விலக – திருகருக்காவூர்
  41. நோய் விலக – வைத்தீஸ்வரன் கோவில்
  42. பிரம்ம தோஷம் விலக – திருகோடிக்கரை
  43. இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய – குடவாசல்
  44. துணிவு பிறக்க – சிக்கல்
  45. வம்பு வழக்குகள் விலக – திருச்செங்காட்டங்குடி
  46. தோல் நோய்கள், புண்கள் குணமாக – திருக்கண்டீச்சுரம்
  47. குடும்ப கவலை விலக – மருதாநல்லூர்
  48. குழந்தை பாக்கியம் பெற, வறுமை நீங்க – திருக்கருவேலி
  49. முன் ஜென்ம பாவம் விலக – தேரெழுத்தூர்
  50. திருமண வாழ்க்கை அமைய – திருச்சத்திமுற்றம்
  51. கர்வம் நீங்க – திருப்பராய்துறை
  52. தீராத துயரம் தீர – திருநெடுங்களம்
  53. அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற – திருவெறும்பூர்
  54. யம பயம் விலக – திருப்பைஞ்ஞீலி
  55. அக்னி தோஷம் விலக – திருவையாறு
  56. பாவம் தீர – திருவைகாவூர்
  57. திருமண தோஷம் விலக – திருக்கஞ்சனூர்
  58. குழந்தை பாக்கியம் கிடைக்க – திருமங்கலக்குடி
  59. திருமண தோஷம் விலக – திருமணஞ்சேரி
  60. மறுபிறவி வேண்டாதவர்கள் – பிரான்மலை
  61. தேவ தோஷம் விலக – திருகோகர்ணம்
  62. பெரியோரை அவமதித்த குற்றம் நீங்க – திருப்புகழூர்
  63. குல சாபம் நீங்க – சீர்காழி
  64. செவ்வாய் தோஷம் விலக – வைத்தீஸ்வரன் கோவில்
  65. குரு துரோக பாவம் நீங்க – தலைஞாயிறு
  66. பிறன்மனை நாடிய தோஷம் விலக – திருப்பனந்தாள்
  67. மரண பயம் விலக – திருப்புறம்
  68. மோட்சம் வேண்ட – திருநெய்த்தானம்
  69. கர்மவினை அகல – திருவானைக்காவல்
  70. அகம்பாவத்தால் ஏற்பட்ட தோஷம் விலக – திருவேதிக்குடி
  71. வறுமை அகல – திருவலஞ்சுழி
  72. சர்ப்ப சாபம் விலக – திருநாகேஸ்வரம்
  73. நவகிரகதோஷம் விலக – கும்பகோணம்
  74. வேதத்தை பரிகாசித்த பாவம் தீர – கோனேரிராஜபுரம்
  75. சூரிய தோஷம் விலக – காரைக்கால்
  76. குல வம்ச பாவம் நீங்க – திருசெம்பெரின்பள்ளி
  77. அடிமையாட்கள் சாபம் விலக – தலைச்செங்காடு
  78. சோமாஸ்கந்தரை குலதெய்வமாக கொண்டவர்கள் – அன்னூர்
  79. ஞானம் பெற – நன்னிலம்
  80. கணவரின் சந்தேக பார்வை விலக – திருக்கண்ணாபுரம்
  81. தம்பதிகள் அன்பு பெருக – திருமருகல்
  82. பங்காளி பகை விலக – திருச்சிக்கல்
  83. இல்லறம் சிறக்க – திருச்சேறை
  84. நவகிரக பாதிப்பு விலக – திருக்குவளை
  85. செவ்வாய் தோஷம் விலக – திருவாய்மூர்
  86. கல்வி மேன்மை பெற – திருநெல்லிக்கா
  87. வறுமை விலக – வண்டுறை
  88. வினைகள் விலக – திருக்கடிக்குளம்
  89. புத்திர தோஷம் விலக, செல்வம் சேர – திருஆலங்குடி
  90. அமைதி பெற – கொட்டாரம்
  91. சந்திர தோஷம் விலக – திட்டை
  92. ராகு தோஷம் விலக – பசுபதி கோவில்
  93. பாவங்கள் விலக – கொட்டையூர்
  94. சனி தோஷம் விலக – ஓமாம்புலியூர்
  95. சிவனடியாரை அவமதித்த பாவம் விலக – தருமபுரம்
  96. அனைத்து பாவங்களும் விலக – மயிலாடுதுறை
  97. கர்மவினைகள் அகல – உத்திரகோச மங்கை
  98. பித்ருதோஷம் விலக – ராமேஸ்வரம்
  99. பிறவி பயன் கிடைக்க – காளையார்கோவில்
  100. ஊழ்வினை தோஷம் விலக – பெண்ணாடம்
  101. கர்மவினை அகல – ராஜேந்திரப்பட்டினம்
  102. ஏழு தலைமுறை பாவங்கள் விலக – அவினாசியப்பர்
  103. நினைத்த காரியம் நடக்க – குரங்கினில் முட்டம்
  104. பித்ரு தோஷ போக – பவானி
  105. மண வாழ்க்கை சிறக்க – ஆச்சான்புரம்
  106. திருஷ்டி தோஷம் விலக – ஆடுதுறை
  107. சர்ப்ப தோஷம் விலக – சங்கரன்கோவில்
  108. முன் ஜென்ம பாவம் விலக – தேரெழுத்தூர்

Read more: பொதுத்துறை வங்கிகளில் 1,007 காலியிடங்கள்.. மாதம் ரூ.85,920 சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..

English Summary

Which temple should you visit for which dosha? Here are 108 Shiva temples for 108 problems..

Next Post

ரூ.2 லட்சம் பரிசு + ஒரு சவரன் தங்க பதக்கம்...! தமிழக அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்...!

Tue Jul 22 , 2025
தமிழக அரசின் 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது (ரூ.2 லட்சம் பரிசு, ஒரு சவரன் தங்க பதக்கம்), 2025-ம் ஆண்டுக்கான முத்தமிழறிஞர் கலைஞர் விருது (ரூ.10 லட்சம் பரிசு ), இலக்கிய மாமணி விருது (ரூ.5 லட்சம் பரிசு), தமிழ்த்தாய் விருது (ரூ.5 லட்சம்), கபிலர் விருது (ரூ.2 லட்சம்) உட்பட 73 விருதுகளுக்கும் தமிழறிஞர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது‌ குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக […]
Tn Govt 2025

You May Like